ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

டெங்கு, ஜிகா காய்ச்சலால் எவ்வளவு பேர் பாதிப்பு?

டெங்கு, ஜிகா காய்ச்சலால் எவ்வளவு பேர் பாதிப்பு?

டெங்கு

டெங்கு

நடப்பாண்டில் தமிழகத்தில் எத்தனை பேருக்கு டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் ஏற்பட்டுள்ளது என்பது தொடர்பாக மருத்துவம் மக்கள் நல்வாழ்வு துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

கடந்த ஆண்டுகளில் ஒப்பிடுகையில் டெங்கு காய்ச்சல் குறைந்து வரும் நிலை காணப்படுகிறது. உயிர்கொல்லி நோயான டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த சுமார் 25 ஆயிரம் களப்பணியாளர்கள் உள்ளாட்சி துறைகள் மூலம் தினக்கூலி அடிப்படையில் கொசு ஒழிப்பு பணிகளை அன்றாடம் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகத்தில் 131க்கும்  மேற்பட்ட எலிசா பரிசோதனை நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டு, டெங்கு காய்ச்சலுக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடந்த 28ம் தேதி வரை 2,394 நபர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், இழப்புகள் எதுவும் இல்லை என கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Must Read : முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் தெரிவிக்க நேரில் வரவேண்டாம் - ஆன்லைனில் அனுப்பு வேண்டுகோள்

அதேபோல் கடந்த இருபத்தி எட்டாம் தேதி வரை 308 நபர்கள் மலேரியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நடப்பாண்டில் ஜிகா வைரசால் தமிழகத்தில் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளதாகவும், தடுப்பூசி திட்டத்தின் கீழ் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் தடுப்பூசிக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரிதாக மனிதருக்கு பரவும் லெப்டோஸ்பைரோஸிஸ் நோயால் இந்தாண்டில் தமிழகத்தில் 254 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Dengue, TN Assembly