மதிமுகவுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கீடு?

மதிமுகவுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கீடு?

மு.க.ஸ்டாலின் - வைகோ

வேட்புமனு தாக்கல் இம்மாதம் 12 ஆம் தேதி முதல் தொடங்குகிறது....

  • Share this:
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுக 8 தொகுதிகளை ஒதுக்கீடு செய்யக் கோரியதாகவும், ஆனால் 4 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க திமுக முன்வந்திருப்பதாகவும் சொல்லப்பட்ட நிலையில், மதிமுக முக்கிய நிர்வாகிகளுடன் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆலோசனை நடத்தினார்.

திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் தங்கள் கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் இம்மாதம் 12 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. பிற கட்கிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

தங்களுக்கு விடுதலை சிறுத்தைகள் சட்சிக்கு வழங்கப் பட்டதைப்போல 6 தொகுதிகளாவது வழங்கவேண்டும் என மதிமுக தரப்பில் வலியுறுத்தப் பட்டதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில், மல்லை சத்யா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுடன் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தங்கள் கட்சி அலுவலகமான, எழும்பூரில் உள்ள தாயகத்தில் ஆலோசனை நடத்தினார்.

Must Read : அனைவருக்கும் இலவசக் கல்வி, இலவச மருத்துவம் - பல்வேறு திட்டங்களுடன் வெளியான பா.ம.க தேர்தல் அறிக்கை

 

2 கட்ட பேச்சுவார்த்தைகள் முடிந்துள்ள நிலையில்,  திமுகவுடன் நடைபெறவுள்ள அடுத்தகட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படுமா அல்லது மீண்டும் இழுபறி நீடிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Published by:Suresh V
First published: