Home /News /tamil-nadu /

குழந்தைகளுக்கு பால் வாங்க வழியில்லாமல் தவிக்கிறோம்! ஊரடங்கால் வாடும் செருப்பு தைக்கும் தொழிலாளர்கள்

குழந்தைகளுக்கு பால் வாங்க வழியில்லாமல் தவிக்கிறோம்! ஊரடங்கால் வாடும் செருப்பு தைக்கும் தொழிலாளர்கள்

காந்திநகரிலுள்ள செருப்பு தைக்கும் தொழிலாளர்கள்.

காந்திநகரிலுள்ள செருப்பு தைக்கும் தொழிலாளர்கள்.

எங்கள் நிலையைக் கருத்தில் கொண்டு தன்னார்வலர்களும் மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் எங்களுக்குத் தேவையான உதவியைச் செய்து தர வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு பலரின் வாழ்வாதாரத்தைப் புரட்டிப் போட்டுள்ளது. குறிப்பாக அன்றாடம் கூலி வேலைக்குச் சென்று பிழைத்து வந்தவர்கள் செய்வதறியாமல் தவித்து வருகின்றனர்.

புதுக்கோட்டை நகர பகுதிக்குட்பட்ட காந்திநகர் 6ம் வீதியில் உள்ள 70 குடும்பங்கள் செருப்பு தைக்கும் தொழில் செய்து வருகின்றனர். புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே சாலையோரத்தில் செருப்பு தைக்கும் தொழிலில் ஈடுபட்டு தினசரி அதிலிருந்து 100 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை கிடைக்கும் வருமானத்தை வைத்து இதுநாள் வரை வாழ்க்கையை நகர்த்தி வந்தனர். ஆனால் தற்போதைய ஊரடங்கு நடவடிக்கையால் கடும் சிரமத்தை எதிர்கொள்வதாக அந்தப் பகுதி மக்கள் கூறுகின்றனர்.

அவர்கள் கூறும்போது, காந்திநகர் பகுதியில் 70 குடும்பங்கள் செருப்பு தைக்கும் தொழிலை மட்டுமே நம்பி உள்ளோம். எங்களுக்கு வேறு ஏதும் தொழில்கள் தெரியாது. வாழ்க்கையில் பல்வேறு கஷ்டங்களைக் கடந்திருந்தாலும் தற்போதுள்ள ஊரடங்கு இதுவரை கண்டிராத வறுமையைத் தந்துள்ளது. வீட்டில் குழந்தைகளை வைத்துக்கொண்டு ஒரு லிட்டர் பால் வாங்கக் கூட வழியின்றி தவித்து வருகிறோம். அரசு கொடுத்த பத்து கிலோ அரிசியும் ஆயிரம் ரூபாய் பணமும் எவ்வளவு நாளைக்கு எங்களை உணவு உண்ண வைக்கும். குடிப்பதற்குக் கூட தண்ணீரை காசு கொடுத்து வாங்க வேண்டிய சூழ்நிலை உள்ளதால் திண்டாடி வருகிறோம். மேலும் எங்களுக்கு நலவாரிய அட்டை இருந்தும் அதிலிருந்து கிடைக்கும் உதவிகளும் இதுவரை எங்களுக்குக் கிடைக்கவில்லை.

எங்கள் நிலையைக் கருத்தில் கொண்டு தன்னார்வலர்களும் மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் எங்களுக்குத் தேவையான உதவியைச் செய்து தர வேண்டும் என்று வேதனையுடன் தெரிவித்தனர்.






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




Also see:
Published by:Rizwan
First published:

Tags: Lockdown, Pudukkottai

அடுத்த செய்தி