Home /News /tamil-nadu /

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மூலம் மறைமுக தேர்தல் எவ்வாறு நடைபெறும்?

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மூலம் மறைமுக தேர்தல் எவ்வாறு நடைபெறும்?

போட்டியிடும் உறுப்பினரை இரண்டு மாமன்ற உறுப்பினர்கள் வழிமொழிய வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிட்டால் தேர்தல் நடத்தப்படும்.

போட்டியிடும் உறுப்பினரை இரண்டு மாமன்ற உறுப்பினர்கள் வழிமொழிய வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிட்டால் தேர்தல் நடத்தப்படும்.

போட்டியிடும் உறுப்பினரை இரண்டு மாமன்ற உறுப்பினர்கள் வழிமொழிய வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிட்டால் தேர்தல் நடத்தப்படும்.

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மூலம் மறைமுக தேர்தல் எவ்வாறு நடைபெறும் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

    தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு போட்டியிட்டு வெற்றி பெற்ற 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் புதன்கிழமை பதவியேற்று கொண்டனர். அதைத்தொடர்ந்து 21 மாநகராட்சிகளில் மேயர் மற்றும் துணை மேயரை தேர்வு செய்வதற்கான மறைமுகத் தேர்தல் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இதேபோன்று 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளில் தலைவர்கள் மற்றும் துணை தலைவர்களை தேர்வு செய்வதற்கும் தேர்தல் நடத்தப்படுகிறது.

    இதையொட்டி, வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் மாநகராட்சி, நகராட்சி ஆணையர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் தலைமையில் மன்ற கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டம் தொடங்கியவுடன் மேயர் மற்றும் தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்படும். அதற்கு அடுத்த 15 நிமிடங்களுக்குள் போட்டியிட விரும்புபவர்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம்.

    போட்டியிடும் உறுப்பினரை இரண்டு மாமன்ற உறுப்பினர்கள் வழிமொழிய வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிட்டால் தேர்தல் நடத்தப்படும். இதற்காக மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ற வகையில் வாக்கு சீட்டு தயார் நிலையில் உள்ளது. இந்த வாக்குச்சீட்டில் போட்டிடுபவர்களின் பெயர்கள் எழுதப்படும். பெயர் எழுதி முடித்த பிறகு அனைத்து உறுப்பினர்களுக்கும் வாக்குச்சீட்டு அளிக்கப்படும்.

    ஒட்டுமொத்த அ.தி.மு.கவும் முடிவு செய்யட்டும்: அதன்பிறகு பதில்சொல்கிறேன்- டி.டி.வி.தினகரன் விளக்கம்

    வாக்களிப்பதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட நகர்புற உள்ளாட்சி அமைப்பின் ஆணையர் மற்றும் செயல் அலுவலரிடம் கையெழுத்து பெற வேண்டும். கையெழுத்து வாங்கிய உறுப்பினர்கள் வாக்கை பதிவு செய்து சீட்டை பெட்டிக்குள் போட வேண்டும். வாக்குப்பதிவு முடிந்த பிறகு உடனடியாக வாக்கு எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

    வெற்றி பெற்றவர்களை நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பின் ஆணையர்கள் மற்றும் செயல் அலுவலர்கள் மேயர் மற்றும் தலைவர் இருக்கையில் அமர வைப்பார்கள். இதே முறையில்தான் துணைமேயர் மற்றும் துணை தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் பிற்பகலில் நடைபெற உள்ளது. ஒரே ஒருவர் மட்டும் வேட்பு மனு தாக்கல் செய்தால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டவராக அறிவிக்கப்படும்.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Local Body Election 2022

    அடுத்த செய்தி