தேர்தல் தோல்விக்கு பிறகு கமல்ஹாசன் எப்படி உள்ளார்? பாஜக நிர்வாகிகளிடம் விசாரித்த பிரதமர் மோடி!

பிரதமர் மோடியுடன் பாஜக எம்.எல்.ஏக்கள்

தமிழக பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் எம்.ஆர். காந்தியை பார்த்ததும் பிரதமர் மோடி நெகிழ்ச்சியடைந்தார்.

  • Share this:
தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு கமல்ஹாசன் எப்படி உள்ளார் என பிரதமர் நரேந்திர மோடி பாஜக  நிர்வாகிகளிடம் விசாரித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழக பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தலைமையில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட 4 பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க நேற்றைய தினம் டெல்லி பயணம் மேற்கொண்டனர்.

அப்போது பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினர்களிடம் தனித்தனியே கருத்துக்களை பகிர்ந்துள்ளார் குறிப்பாக தமிழக பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் எம்.ஆர். காந்தியை பார்த்ததும் பிரதமர் மோடி நெகிழ்ச்சியடைந்தார்.

1967-ல் அவர் கன்னியாகுமரிக்கு வந்தபோது எம்.ஆர்.காந்தி மாவட்டத் தலைவராக இருந்ததை பிரதமர் நினைவுகூர்ந்தார். பாசத்துடன் அவருடன் பிரதமர் கலந்துரையாடினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தொடர்ந்து, 4 எம்.எல்.ஏ.க்களும் அவரவர் தொகுதிகளின் வளர்ச்சிக்கான சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். இது தொடர்பாக மத்திய அமைச்சர்களை சந்திக்க இருப்பதையும் கூறியுள்ளனர். அனைத்தையும் கவனமாக கேட்டுக் கொண்ட பிரதமர் மோடி, சட்டமன்றத்தில் மக்கள் பிரச்சினைகளை முன்வைத்து சிறப்பாக செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார்.

பிரதமர் உடனான 35 நிமிட சந்திப்பு ஆக்கப்பூர்வமானதாக, மகிழ்ச்சிகரமாக நேர்மறை சக்தியை அளிக்கும் ஒன்றாக அமைந்தது என சட்டமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர். குறிப்பாக தமிழகத்தின் மீதும், தமிழக மக்கள் மீதும் பிரதமர் மோடி காட்டிய ஆர்வமும், அக்கறை கொண்டும் பேசினார் என கூறினர்.

சட்டமன்றத்தில் பேசும் எந்தவொரு தகவலாக இருந்தாலும் முழுமையாக ஆராய்து, அறிந்து பேச வேண்டும் என்று அறிவுறுத்தினார். அரசின் திட்டங்களை மக்களிடம் எடுத்துச் செல்வதில் அதிக அக்கறை காட்ட வேண்டும் என்றார். மத்திய அரசின் திட்டங்கள், பிரதமர், கட்சித் தலைவர்களின் செயல் திட்டங்களை தமிழில் மொழிபெயர்த்து மக்களிடம் கொண்டுச்  செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

Also read: மதுரையில் நேற்று கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட இளைஞர் மரணம்; இறப்பிற்கான காரணம் குறித்து விசாரணை!

இதனிடையே, பாஜக தலைவர் எல்.முருகன் பிரதமருடன் பேசும் போது, கோவை தெற்கு சட்டமன்ற தேர்தலில் வானதி சீனிவாசன் சுட்டிக் காட்டி இவர்தான் கமல்ஹாசனை தோற்கடித்தவர் என்று கூறியுள்ளார். அப்போது அவரின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடி, கமல்ஹாசன் எப்படியிருக்கிறார் என்பதையும் விசாரித்து இருக்கிறார்.
Published by:Esakki Raja
First published: