Home /News /tamil-nadu /

நடிகர் வடிவேலு எப்படி இருக்கிறார்? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

நடிகர் வடிவேலு எப்படி இருக்கிறார்? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

நடிகர் வடிவேலு

நடிகர் வடிவேலு

சென்னை அசோக் நகரில் ஒரே தெருவில் உள்ள இரண்டு வீடுகளில் 10 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் அந்த பகுதியை மருத்துவதுறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டார். அப்போது நடிகர் வடிவேலுவின் உடல்நிலை குறித்து விளக்கம் அளித்தார்.

மேலும் படிக்கவும் ...
    சென்னை அசோக் நகர், எல்.ஜி.ஜி.எஸ் காலனி 19ஆவது தெருவில் இருக்கும் 2 வீட்டுகளில் 10 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ள நிலையில், அந்த பகுதி தனிமை படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அந்தப் பகுதியை மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருத்துவத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆய்வு நடத்தினர்.

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன், சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தற்போது நாள்தோறும் 250 என்ற விதத்தில் பாதிப்பு கண்டறியப்படுகிறது. சென்னையில் 39,537 தெருக்கள் உள்ள நிலையில் 507 தெருக்களில் கொரோனா தொற்றாளர்கள் உள்ளனர். இதில் 429 தெருக்களில் 3-க்கும் குறைவானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    மேலும் 78 தெருக்களில் 3 பேருக்கும், 42 தெருக்களில் 4 பேருக்கும்,18 தெருக்களில் 5 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 6 முதல் 10 பாதிக்கப்பட்ட நபர்கள் உள்ள 4 தெருக்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக உள்ளன. 10 முதல் 25 பேர் பாதிக்கப்பட்ட நபர்கள் உள்ள ஒரு தெரு கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக உள்ளது என்று கூறினார்.

    மேலும், கொரோனோவுக்கு தேவையான மருந்து நம்மிடம் தயராக உள்ளது. முதல் தவணை தடுப்பூசி 86% இரண்டாம் தவணை தடுப்பூசி 58% செலுத்தப்பட்டுள்ளது. டெங்கு தற்போது கட்டுக்குள் இருக்கிறது. தற்போது 600 நபர்களுக்கு பாதிப்பு உள்ளது.

    நடிகர் வடிவேல் அவர்களுக்கு ஏ சிம்டம்ஸ் தொற்று மட்டுமே உள்ளது. அவர் நலமாக இருக்கிறார். தமிழகத்தில், கொரோனா தொற்று பாதிப்பு உயர்ந்து, மீண்டும் அது குறையும். எனவே பயப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று கூறினார்.

    மேலும், மீண்டும் பள்ளி திறப்பு, இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட முடிவுகள் வரும் 31ம் தேதி தமிழக முதல்வர் ஆலோசனை செய்த பின்னர் அறிவிப்பார் என்று தெரிவித்தார்.

    Read More : நீட் விலக்கு மசோதா பரிசீலனையில் இருக்கிறது - ஆளுநர் மாளிகை விளக்கம்

    இந்நிலையில், இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 781 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக டெல்லியில் 238 பேருக்கும், மகாராஷ்டிராவில் 167 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. சிகிச்சைக்குப் பிறகு ஒமைக்ரான் தொற்றாளர்கள் 241 பேர், டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர்.

    Must Read : ராஜேந்திர பாலாஜி டெல்லியில் பதுங்கி இருக்கிறாரா? விரைந்தது தனிப்படை

    இதனிடையே, தினசரி பாதிப்பு 50 சதவிகிதம் அதிகரித்து, 24 மணி நேரத்தில் புதியதாக ஒன்பதாயிரத்து 195 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சிகிச்சைக்குப் பிறகு ஏழாயிரத்து 347 பேர் குணமடைய, தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 77 ஆயிரத்து 2 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பலனின்றி கொரோனாவால் மேலும் 302 பேர் உயிரிழக்க, மொத்த பலி எண்ணிக்கை 4 லட்சத்து 80 ஆயிரத்து 592 ஆக உயர்ந்துள்ளது.

    Read More : கனிமொழி - உதயநிதி இடையே அதிகார போட்டி?

    இதனிடையே, நாடு முழுவதும் செலுத்தப்பட்டுள்ள தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை, 143 கோடியே 15 லட்சத்தை கடந்துள்ளது என்பது குறிப்பித்தக்கது.
    Published by:Suresh V
    First published:

    Tags: Corona, Omicron, Vadivelu

    அடுத்த செய்தி