பட்டாசு விபத்து நடந்தது எப்படி? - உயிர் தப்பி வந்த தொழிலாளி சொன்ன அதிர்ச்சி தகவல்

பட்டாசு விபத்து நடந்தது எப்படி? - உயிர் தப்பி வந்த தொழிலாளி சொன்ன அதிர்ச்சி தகவல்

மயிரிழையில் உயிர் தப்பி வந்த தொழிலாளி முத்துராஜ்

பட்டாசு ஆலையில் விதிமீறி ஆளுயரத்திற்கு புற்கள் வளர்ந்து இருந்ததும், பணி நாளில் அதை வெட்டியதுமே இந்த விபத்திற்கு காரணம் என மயிரிழையில் உயிர் தப்பி வந்த தொழிலாளி முத்துராஜ் தெரிவித்துள்ளார்.

  • Share this:
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகிலுள்ள காளையார் குறிச்சி பகுதியிலுள்ள தங்கராஜ் பாண்டியன் பட்டாசு ஆலையில் நேற்று முன்தினம் பெரும் பட்டாசு விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 4 பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்த நிலையில், 18 பேர் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்திற்கு, முனை மருந்து உலர்த்தும் போது ஏற்பட்ட உராய்வே காரணம் என கூறப்பட்டது. மேலும், இரும்பு பொருட்களை பயன்படுத்தியது உள்ளிட்ட சில காரணங்களும் தெரிவிக்கப்பட்டன. இருந்தும் உண்மையான காரணம் என்ன என்பது வெளியே தெரியாமல் இருந்து வந்தது.

எனவே விபத்தில் தப்பி வந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சுக்கிரவார் பட்டி கிராமத்தை முத்துராஜ் என்ற தொழிலாளியை சந்தித்து, விபத்திற்கான உண்மையான காரணம் என்ன? என்று கேட்டோம்.கண்ணீர் கலந்த குரலில் நடந்த சம்பவத்தை அப்படியே விவரித்தார்.

"ஆலையில் பட்டாசு தயாரிக்கும் பணிகளில் தொழிலாளர்கள் கவனமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தோம். ஆலையில் அறைகளை சுற்றி கோரை புற்கள் உயரமாக வளர்ந்து இருந்தன. அதை அறுப்பதற்காக புல் அறுக்கும் இயந்திரம் வந்திருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக புற்களை இயந்திரம் அறுத்துக் கொண்டே வந்தது. சரியாக 4:10 மணி அளவில் நான் வேலை பார்த்துக் கொண்டிருந்த அறைக்கு சற்று தள்ளி புற்கள் அறுக்கப்பட்டு கொண்டிருந்தன. அப்போது, புற்களுக்குள் இருந்து பறந்து வந்த கற்கள் உலர்த்த வைக்கப்பட்டிருந்த முனை மருந்தின் மீது விழுந்தது. அதனால் சட்டென்று மருந்து வெடித்து சிதறியதில் அருகிலிருந்த அறைகள் நொறுங்கி தரை மட்டமானது.கண் இமைக்கும் கணத்திற்குள் நிகழ்ந்த இந்த சம்பவத்தால் என் இடுப்பு பகுதியிலிருந்து கால் வரை தீக்காயம் ஏற்பட்டது. உடனே மயக்கமடைந்த நிலையில் சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டேன்" என்றார்.

மேலும் படிக்க... தென்மாவட்டங்களில் 3 நாள் பிரசாரம்: ராகுல் காந்தி இன்று தமிழகம் வருகை

இதில் நடந்த விதிமீறல் குறித்து பேசியவர்,
"பட்டாசு ஆலையில் காய்ந்த புற்கள் அதிகமாக இருக்க கூடாது. அதை முறையாக பராமரித்து வெட்ட வேண்டும். அதையும், விடுமுறை நாட்களில் தான் அந்த பணிகளை மேற்கொள்ள வேண்டும். ஆனால், இங்கு அதிகமான புற்கள் வளர்ந்தும் அதை நிர்வாகம் கண்டு கொள்ளாமல் இருந்து வந்தது. நேற்று வேலை நாளில் தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்த போது புற்களை வெட்டினர். நிர்வாகத்தின் இந்த அலட்சியமே இந்த விபத்திற்கு காரணம்" என வேதனையுடன் கூறினார்.

விருதுநகரில் மீண்டும் வெடி விபத்து - 5 பேர் உயிரிழப்பு; 13 பேர் காயம்உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vaijayanthi S
First published: