முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தரக்குறைவான பதிவு - படிக்காமல் ஃபார்வேர்டு செய்வீர்களா? எஸ்.வி.சேகருக்கு நீதிமன்றம் கேள்வி

தரக்குறைவான பதிவு - படிக்காமல் ஃபார்வேர்டு செய்வீர்களா? எஸ்.வி.சேகருக்கு நீதிமன்றம் கேள்வி

எஸ்.வி.சேகர்

எஸ்.வி.சேகர்

எஸ்.வி. சேகர் தெரியாமல் இந்த பதிவை பகிர்ந்துவிட்டார் என்றும் வேறு உள்நோக்கம் எதுவும் அவருக்கு இல்லை என்று தெரிவித்த அவரது தரப்பினர், பதிவை பகிர்ந்ததற்கு மன்னிப்புக் கோருவதாகவும் தெரிவித்தனர்.

  • Last Updated :

பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து தரக்குறைவான பதிவை பகிர்ந்தது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் படிக்காமல் ஏன் ஃபார்வேர்டு  செய்தீர்கள்  என எஸ்.வி. சேகருக்கு கேள்வி எழுப்பியுள்ள உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, அவரதுக்கு எதிராக வழக்கை ரத்து செய்ய முடியாது என்று தெரிவித்துள்ளது.

நடிகர் எஸ்.வி. சேகர் கடந்த 2018ம் ஆண்டு பெண் பத்திரிக்கையாளர்களை இழிவுப்படுத்தும் பதிவு ஒன்றை தனது முகநூலில் பகிர்ந்திருந்தார்.  அவரது இந்த பதிவுக்கு பத்திரிக்கையாளர்கள், அரசியல்கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்தனர். பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து தரக்குறைவான கருத்தை பதிவிட்ட எஸ்வி சேகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

அதனடிப்படையில் இந்திய தண்டனைச் சட்டத்தின் 3 பிரிவுகள் மற்றும் பெண்கள் மீதான கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின் ஒரு பிரிவு என 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனிடையே தன் மீதான வழக்கில் நேரில் விசாரணைக்கு ஆஜராவதற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும் வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் எஸ்.வி. சேகர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது தொடர்பான வழக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதி நிஷா பானு தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, எஸ்.வி. சேகர் தெரியாமல் இந்த பதிவை பகிர்ந்துவிட்டார் என்றும் வேறு உள்நோக்கம் எதுவும் அவருக்கு இல்லை என்று தெரிவித்த அவரது தரப்பினர், பதிவை பகிர்ந்ததற்கு மன்னிப்புக் கோருவதாகவும் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

இதையும் படிங்க: ஓபிஎஸ் உள்ளிட்ட அதிமுக எம்.எல்.ஏ.-க்கள் கைது

தெரியாமல் எப்படி இதுபோன்ற அவதூறு தகவலை ஃபார்வேர்டு செய்தீர்கள் என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, படிக்காமல் ஃபார்வேர்டு செய்துவிட்டு சர்ச்சை கிளம்பியதும்  மன்னிப்பு கேட்டால் சரியாகிவிடுமா என்றும் கேள்வி எழுப்பினார்.

மேலும் படிக்க: ஒரே இரவில் 25 கடைகளில் கைவரிசை காட்டிய பலே கொள்ளையர்கள்.. போலீசில் சிக்கியது எப்படி?

top videos

    வேலும் வழக்கை ரத்து செய்ய முடியாது என்றும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது. அடுத்த வாரம் இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    First published:

    Tags: Madurai High Court, S.ve.sekar