முதலமைச்சரால் தொடங்கப்பட்ட சிறப்பு குறைதீர் திட்டம் செயல்படுவது எப்படி?

இந்த திட்டத்திற்காக 76 லட்சத்து 25,000 ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

முதலமைச்சரால் தொடங்கப்பட்ட சிறப்பு குறைதீர் திட்டம் செயல்படுவது எப்படி?
எடப்பாடி பழனிசாமி (கோப்பு படம்)
  • News18
  • Last Updated: August 20, 2019, 8:21 AM IST
  • Share this:
முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டுள்ள சிறப்பு குறைதீர் திட்டம் எப்படி செயல்படுத்தப்படுகிறது. மக்கள் இதனை எப்படி பயன்படுத்தலாம் என்பதை பார்க்கலாம்.

நகர்புற வார்டுகள் மற்றும் கிராமங்களில் மக்களை தேடிச்சென்று அதிகாரிகள் மனுக்கள் பெறுவது குறித்து முதலில் விளம்பரப்படுத்தப்படும். குறிப்பிட்ட அந்த நாளில், அனைத்து அரசுத் துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் மக்களை சந்தித்து மனுக்களை பெறுவர்.

ஆகஸ்ட் மாத இறுதிக்குள் தமிழகம் முழுவதும் மனுக்களை பெற திட்டமிடப்பட்டுள்ளது. அதன் பின்னர் மக்களிடம் வாங்கப்படும் மனுக்கள் கணினியில் பதியப்பட்டு தொடர்புடைய துறைக்கு ஒரு வார காலத்திற்குள் அனுப்பப்படும்.


அதன்பின் தகுதியுள்ள மனுக்கள் மீது ஒரு மாதத்தில் தீர்வு காண்பதே இந்த திட்டத்தின் நோக்கம். பின்னர் செப்டம்பர் மாதத்தில் ஒவ்வொரு மாவட்ட அமைச்சர்கள் தலைமையில் வட்ட அளவிலான விழாக்கள் நடத்தப்பட்டு, சாலைவசதி, தெரு விளக்குகள், மருத்துவம், சுகாதாரம், குடிநீர் வழங்கல் போன்ற அடிப்படை கோரிக்கைகளுக்கு அந்த விழாக்களிலேயே தீர்வு காணப்பட உள்ளது.

இதற்காக மொத்தம் உள்ள 304 வட்டத்திற்கு தலா 25,000 ரூபாய் வீதம், 76 லட்சத்து 25,000 ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Also see... ஊர்தோறும் சிறப்பு குறைதீர் கூட்டம்... மக்கள் எப்படி
First published: August 20, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்