Home /News /tamil-nadu /

மாநில அரசை வரி குறைக்கச் சொல்வதா? அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் காட்டம்!

மாநில அரசை வரி குறைக்கச் சொல்வதா? அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் காட்டம்!

மாநில அரசை வரி குறைக்கச் சொல்வதா? அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் காட்டம்!

மாநில அரசை வரி குறைக்கச் சொல்வதா? அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் காட்டம்!

Petrol price | கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பெட்ரோல் விலையை லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைத்தோம் என்று பிடிஆர் தெரிவித்துள்ளார்.

    பெட்ரோல், டீசல் வரியை மாநில அரசு குறைக்க வேண்டும் என மத்திய அரசு கூறுவது ஏற்புடையதல்ல என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.

    பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்த நிலையில், அது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள மாநில நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மத்திய அரசு 2014 முதல் 2021ம் ஆண்டு வரை தொடர்ந்து பெட்ரோல், டீசலுக்கான வரியை உயர்த்தி வந்ததாகவும், வரியை குறைக்கக்கோரி தமிழக அரசு தொடர்ந்து கோரிக்கை வைத்த நிலையில், தற்போது மத்திய அரசு அதனை கவனித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

    கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பெட்ரோல் விலையை லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைத்ததாகவும், இதனால் ஆண்டுக்கு ஆயிரத்து 160 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

    பலமுறை வரியை உயர்த்திய மத்திய அரசு, மாநில அரசுகளிடம் கருத்து கேட்கவில்லை என தெரிவித்துள்ள பழனிவேல் தியாகராஜன், உயர்த்தப்பட்ட வரியின் ஒரு பகுதியை மட்டுமே மத்திய அரசு குறைத்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், தற்போது வரி குறைக்கப்பட்டாலும் மத்திய அரசின் 2014ம் ஆண்டின் வரியோடு ஒப்பிடும்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு 10 ரூபாய் 42 காசுகள் அதிகம் இருப்பதாகவும், டீசல் விலை லிட்டருக்கு 12 ரூபாய் 23 காசுகள் அதிகம் என்றும் தனது அறிக்கையில் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருக்கிறார்.

    எனவே, மாநிலங்கள் தங்கள் வரியை குறைத்துக் கொள்ள வேண்டுமென மத்திய அரசு கூறுவது ஏற்புடையதல்ல என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Minister Palanivel Thiagarajan, Petrol Diesel Price

    அடுத்த செய்தி