நிதிச்சுமையை காரணம் காட்டி பழைய பென்சன் திட்டத்தை நிறைவேற்ற இயலாது என்று நிதியமைச்சர் கூறுவது அதிர்ச்சி அளிக்கிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தருமபுர ஆதினம் பல்லக்கு தூக்கும் விவகாரத்தில் அவர்கள் விரும்பிதான் தூக்குகிறார்கள் என்பது ஏற்புடையது அல்ல. ஆதீனத்தை கேட்டுக்க கொள்வது அவர்கள் இதனை கைவிட வேண்டும். அண்ணாமலை நானே சென்று பல்லக்கு தூக்கும் என்று சொல்வது ஏற்புடையதல்ல. பாஜக இதில் அரசியல் செய்கிறது.
நிதிச்சுமையை காரணம் காட்டி பழைய பென்சன் திட்டத்தை நிறைவேற்ற இயலாது என்று நிதியமைச்சர் கூறுவது அதிர்ச்சி அளிக்கிறது. தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவோம் என்று முதல்வர் கூறிய நிலையில், நிதியமைச்சர் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்துவது சாத்தியம் இல்லை என்று கூறுவது முறை அல்ல. முதல்வர் இதனை தெளிவு படுத்த வேண்டும்.
நீதிமன்றங்கள், நீதிபதிகள் குடியிருப்புகள் நீர்நிலை புறம்போக்கில் இருக்கிறது. இதற்கு நீதிமன்றம் என்ன சொல்லுகிறது. ஏழை எளிய மக்களின் குடியிருப்புகளை அகற்றாமல் தமிழக அரசு வாதாடி மாற்று வழி கொண்டு வர வேண்டும். நீதிமன்றம் இந்த உத்தரவை மறு பரிசீலனை செய்ய வேண்டும்.
தமிழக நிதியமைச்சர் நேற்று, மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்தின் போது மீண்டும் ஒருமுறை பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்துவது சாத்தியமில்லை என தெரிவித்திருக்கிறார்.
— கே.பாலகிருஷ்ணன் - K Balakrishnan (@kbcpim) May 8, 2022
சமையல் எரிவாயு விலையை மனசாட்சி இல்லாமல் ஏற்றுகிறார்கள். செஸ் வரி மூலம் ரூ.28 லட்சம் கோடி வருவாய் மத்திய அரசுக்கு கிடைத்துள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்களின் 11 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்வதற்காக இவ்வாறு வரி விதிக்கப்படுகிறதா? என்று கேள்வி எழுப்பினார்.
இதனிடையே, பழைய ஓய்வூதிய திட்டம் சுமையல்ல! அரசின் கடமை!! முதலமைச்சர் தலையிட்டு உறுதிசெய்திட வேண்டும் என கே.பாலகிருஷ்ணன் ட்விட்டரிலும் வலியுறுத்தி பதிவிட்டுள்ளார்.
Published by:Esakki Raja
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.