பாலகிருஷ்ணா ரெட்டிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய முடியாது - உயர்நீதிமன்றம்

வாகனம் மீது கல்வீசிய வழக்கில் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

Web Desk | news18
Updated: January 12, 2019, 8:02 AM IST
பாலகிருஷ்ணா ரெட்டிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய முடியாது - உயர்நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்
Web Desk | news18
Updated: January 12, 2019, 8:02 AM IST
முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி மீதான தண்டனையை நிறுத்திவைக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது. அவர் மீதான குற்றச்சாட்டுகள் தீவிரமானவை என தெரிவித்துள்ளது.

ஓசூர் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு, பேருந்து மீது கல்வீசி சேதப்படுத்திய வழக்கில் சிறப்பு நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. இதனால் பதவி இழந்த அவர், தம் மீதான தண்டனையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்த வழக்கு நேற்று நீதிபதி பார்த்திபன் முன்பு விசாரணைக்கு வந்தபோது நீதிபதிக்கும் வழக்கறிஞருக்கும் காரசார விவாதம் நடைபெற்றது. முந்தைய காலத்தில் சட்டத்திற்கு எதிராக செயல்பட்டவர் என்று நீதிபதி சுட்டிக்காட்டினார். ஆனால் தற்போது சட்டத்தை வகுக்கும் பதவியில் நீடிக்க வேண்டும் என்பதற்காக தண்டனைக்கு தடை விதிக்க கோருவதை புரிந்துகொள்ள முடியவில்லை என வியப்பு தெரிவித்தார்.

மேலும் கட்சி தலைவர்களின் வழிகாட்டுதலின் படிதான் மக்கள் செயல்படுகிறார்கள் என்றும் அந்தத் தலைவர்களே வன்முறையில் ஈடுபடுவது, பொதுசொத்துகளுக்கு சேதம் விளைவிப்பது போன்றவை உண்மையான மக்கள் பிரதிநிதிக்கான அடையாளம் இல்லை என்றும் வேதனை தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர் மீதான குற்றச்சாட்டுகள் தீவிரமானவை எனவும், ஆதாரங்களை ஆராயாமல் இடைக்கால கோரிக்கையில் முடிவெடுப்பது சரியாக இருக்காது என்றும் நீதிபதி கூறினார். பாலகிருஷ்ணா ரெட்டி மீதான தண்டனையை நிறுத்திவைக்கவோ, தீர்ப்புக்கு தடை விதிக்கவோ முகாந்திரம் இல்லை என்ற நீதிபதி பாலகிருஷ்ணா ரெட்டியின் இடைக்கால மனுக்களை தள்ளுபடி செய்ததோடு, பிரதான மேல்முறையீடு வழக்கை பிப்ரவரி முதல் வாரத்திற்கு ஒத்திவைத்தார்.

Also see... காவல் நிலையத்தில் டிக் டாக் செய்த இளைஞர்கள் கைது! 
First published: January 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...