• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் ரேஷன் கார்டு பெறுவது எப்படி?

கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் ரேஷன் கார்டு பெறுவது எப்படி?

ரேஷன் கார்டு

ரேஷன் கார்டு

கணவரால் நிராதரவாக கைவிடப்பட்டு அல்லது மணவாழ்வு முறிவுற்று தனியாக வசிக்கும் பெண்களுக்கு புதிய குடும்ப அட்டை வழங்குவது தொடர்பாக தமிழக அரசு அறிவுரைகளை வழங்கியுள்ளது.

  • Share this:
    கணவனால் கைவிடப்பட்ட மற்றும் மணவாழ்வு முறிவுற்று தனியாக வசிக்கும் பெண்கள் தங்களுக்கு என தனியாக ரேஷன் கார்டு பெறுவதில் பல்வேறு சிக்கல்கள் இருந்து வருவதாக தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து,  அவர்களுக்கு எளிதாக ரேஷன் கார்டு  கிடைக்கும் வகையில்  அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  “கணவனால் நிராதரவாக கைவிடப்பட்டு அல்லது மணவாழ்வு முறிவுற்று தனியாக வசிக்கும் பெண்களின் பெயர் கணவனின் குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள காரணத்தினாலும், அவரது கணவர் அப்பெண்மணியின் பெயரை நீக்குவதற்கு இணைய வழியில் விண்ணப்பிக்க முன்வராத காரணத்தினாலும், நீதிமன்ற விவாகரத்து சான்று போன்ற ஆவணங்கள் இல்லாத காரணத்தினாலும், சம்மந்தப்பட்ட பெண்மணிக்கு குடும்ப அட்டை வழங்கப்படாத நிலையில்,  அப்பெண்மணியின் உணவு பாதுகாப்பு பாதிக்கப்படுவதாக அரசின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

    இந்நிலையில், ஒரு பெண்மணி கணவரால் நிராதரவாக கைவிடப்பட்டு அல்லது மணவாழ்வு முறிவுற்று தனியாக வசித்துவரும் நிலையில், அவரது ஆதார் எண் கணவர் வைத்திருக்கும் குடும்ப அட்டையில் இணைக்கப்பட்டுள்ள நேர்வுகளில், சம்மந்தப்பட்ட பெண் மற்றும் அவரை சார்ந்துள்ள குழந்தைகள் தனியாக வசித்து வருவது தணிக்கை மூலம் உறுதி செய்து, எழுத்து மூலமான வாக்குமூலம் பெற்று,

    சம்மந்தப்பட்ட அலுவலர் தனது அதிகார வரம்பினை பயன்படுத்தி குடும்பத்தலைவரின் அனுமதியில்லாமல் சம்மந்தப்பட்ட பெண்ணின் பெயரினை குடும்ப அட்டையிலிருந்து நீக்கவும், தனியாக வாழும் சம்மந்தப்பட்ட பெண்மணி புதிய குடும்ப அட்டைக் கோரும்போது சட்டபூர்வமான நீதிமன்ற விவாகரத்துச் சான்று போன்ற ஆவணங்கள் ஏதும் சமர்ப்பிக்க வலியுறுத்தாமல் புதிய குடும்ப அட்டை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: 

    ரேஷன் கார்டு தொலைந்து போனால் நீங்கள் முதலில் செய்ய வேண்டியது என்ன தெரியுமா?

    குடும்ப அட்டையை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்வது இவ்வளவு ஈசியா?

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: