ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

விதிமீறி கட்டப்படும் கட்டடங்கள் சீல் வைக்கப்பட்டு உடனடியாக இடிக்கப்படும் : அமைச்சர் முத்துசாமி எச்சரிக்கை

விதிமீறி கட்டப்படும் கட்டடங்கள் சீல் வைக்கப்பட்டு உடனடியாக இடிக்கப்படும் : அமைச்சர் முத்துசாமி எச்சரிக்கை

அமைச்சர் முத்துசாமி

அமைச்சர் முத்துசாமி

கட்டடங்களுக்கு வரைபட அனுமதி அவசியமானது என அமைச்சர் முத்துசாமி கூறியுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

விதிமீறி கட்டப்படும் கட்டடங்கள் சீல் வைக்கப்பட்டு உடனடியாக இடிக்கப்படும் என வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

ஈரோட்டில் மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில், மாற்றுத்திறனாளிகளுக்கு அமைச்சர் முத்துசாமி நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கட்டட அனுமதிக்கு தற்போதுள்ள விதிமுறைகளில் நடைமுறைப்படுத்த முடியாத விதிகள் குறித்து பொறியாளர்கள், வரைகலையாளர்களிடம் கருத்து கேட்டுள்ளதாக கூறினார்.

இதையும் படிங்க: திராவிட இயக்கத்தின் அடிநாதத்தை எந்த கொம்பனாலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

 

மேலும் அவர்களிடம் இருந்து அறிக்கை கிடைத்த பின், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிவித்தார். கட்டடங்களுக்கு வரைபட அனுமதி அவசியமானது என குறிப்பிட்ட அவர், சிஎம்டிஏ மூலம் 270 கட்டடங்களுக்கு அனுமதி அளித்துள்ள நிலையில், 9 கட்டடங்கள் விதிமீறிய நிலையில் உள்ளதால் அதன் பயன்பாட்டை நிறுத்தி வைத்துள்ளதாக அமைச்சர் முத்துசாமி கூறினார்.

First published:

Tags: Cmda