Home /News /tamil-nadu /

சென்னையில் வீசிய சூறைக்காற்று: தூக்கிவீசப்பட்ட தகர கொட்டகைகள் - வீடுகள் சேதம்!

சென்னையில் வீசிய சூறைக்காற்று: தூக்கிவீசப்பட்ட தகர கொட்டகைகள் - வீடுகள் சேதம்!

சென்னையில் வீசிய சூறைக்காற்று

சென்னையில் வீசிய சூறைக்காற்று

கொரோனோ ஊரடங்கால் வேலை இல்லாமல் இருக்கும் இந்த சூழலில் பாதிக்கப்பட்ட தங்களது வீடுகளை சீரமைக்க முடியாத நிலை உள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    சென்னையில் தொழிலாளர்கள் தங்குவதற்காக போடப்பட்டிருந்த தகர கொட்டகைகள் சூரைக்காற்றில் தூக்கிவீசப்பட்டு அருகாமை குடியிருப்புகள் மீது விழுந்து வீடுகள் சேதாரமடைந்தது.

    சென்னை கிண்டி அருகே தொழிற்பேட்டை பகுதியில் தனியார் கட்டிட நிறுவனம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றது. இன்று அதிகாலை சென்னையில் பரவலாக மழை பெய்தது. அத்துடன் பலத்த காற்று வீசியது. இதில் அடுக்குமாடி குடியிருப்பு நிறுவனம் சார்பில் தொழிலாளர்கள் தங்குவதற்காக போடப்பட்டிருந்த தகர கொட்டகைகள் காற்றில் தூக்கி வீசப்பட்டதில் தகர அட்டைகள் சுமார் 20அடி தூரம் பறந்து அருகாமையில் நாகிரெட்டி தோட்டம் பகுதியில் உள்ள வீடுகள் மீது விழுந்தது.

    இதில் 4 ஓட்டு வீடுகள் மற்றும் 3 குடிசை வீடுகள் பலத்த சேதமடைந்தது. அதிகாலை 5.30 மணியளவில் நடந்த இச்சம்பவத்தின் போது வீடுகளில் தூங்கி கொண்டிருந்தவர்கள் மீது தகர அட்டைகள் வீடுகள் மீது விழுந்ததில் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் சிக்கி கொண்டனர்.

    அவர்களின் அலறல் சேத்தம் கேட்டு அருகாமை வீடுகளில் வசிப்பவர்கள் அவர்கள் வெளியேற உதவி செய்தனர். இந்த சம்பவத்தில் 3 பேர் லேசான காயம் அடைந்தனர்.

    கொரோனோ ஊரடங்கால் வேலை இல்லாமல் இருக்கும் இந்த சூழலில் பாதிக்கப்பட்ட தங்களது வீடுகளை சீரமைக்க முடியாத நிலை உள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர். எனவே பாதிக்கப்பட்ட வீடுகளை சீரமைக்க அரசு உதவிட வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Also see...






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Chennai, Chennai Rain, CoronaVirus, Cyclone, Lockdown

    அடுத்த செய்தி