ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

விபத்தில் மூளைச்சாவு அடைந்த ரயில்வே ஊழியர் : உறுப்பு தானம் மூலம் 7 ​​உயிர்களை காப்பாற்றிய நெகிழ்ச்சி சம்பவம்!

விபத்தில் மூளைச்சாவு அடைந்த ரயில்வே ஊழியர் : உறுப்பு தானம் மூலம் 7 ​​உயிர்களை காப்பாற்றிய நெகிழ்ச்சி சம்பவம்!

உறுப்பு தானம்

உறுப்பு தானம்

ரயில்வே ஊழியரின் உடலில் இருந்து தானமாக வழங்கப்பட்ட உடல் உறுப்புகள் 7 பேருக்கு வழங்கப்பட உள்ளதாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tirupathur (Tiruppattur), India

  ஓசூர் காவேரி மருத்துவமனையில் மூளை சாவு அடைந்த இளைஞரின் இதயம் நுரையீரல் உள்ளிட்ட உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டு சென்னை பெங்களூர் மற்றும் கோவை ஆகிய இடங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.

  திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் (31). இவருக்கு மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளனர். பிரபாகரன் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் ரயில்வே ஊழியராக வேலை பார்த்து வந்தார். கடந்த 20 ஆம் தேதி பணியின் போது கீழே விழுந்ததில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் ஜோலார்பேட்டை ரயில்வே மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

  பின்னர் மேல் சிகிச்சைக்காக ஓசூர் காவேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார். தொடர் சிகிச்சையில் இருந்த அவர் நேற்று அதிகாலை உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது குடும்பத்தினர் முன் வந்தனர்.

  36 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது இஸ்ரோவின் ’GSLV LVM3’ ராக்கெட்!

  காவேரி மருத்துவமனை குழுவினர் மற்றும் உடல் உறுப்பு அறுவை சிகிச்சை மருத்துவ குழுவினர் இணைந்து பல மணி நேரத்திற்கு பின்பு மூளை சாவடைந்த பிரபாகரனின் உடலில் இருந்து இதயம், நுரையீரல், கண்கள், கிட்னி உள்ளிட்ட உடல் உறுப்புகளை அறுவை சிகிச்சை மூலம் எடுத்தனர். பின்னர் இந்த உறுப்புகள் சென்னை, கோவை, பெங்களூர் ஆகிய இடங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

  சென்னையில் உள்ள எம் ஜி எம் மருத்துவமனைக்கு இதயம் மற்றும் நுரையீரல் ஆகியவை முதலில் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டது. இதனைத் தொடர்ந்து கோவையில் உள்ள கேஎம்ஜிஎச்க்கு சிறுநீரகமும், பெங்களூரில் உள்ள மருத்துவமனைக்கு கண்களும் ஆம்புலன்ஸ் வாகனத்தில் அடுத்தடுத்து கொண்டு செல்லப்பட்டது.

  ரயில்வே ஊழியரின் உடலில் இருந்து தானமாக வழங்கப்பட்ட உடல் உறுப்புகள் 7 பேருக்கு வழங்கப்பட உள்ளதாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

  Published by:Ilakkiya GP
  First published:

  Tags: Brain death, Organ donation, Thirupathur