ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

போர் வரும் என நினைக்கவில்லை: தமிழகம் திரும்பிய மருத்துவ மாணவி பேட்டி

போர் வரும் என நினைக்கவில்லை: தமிழகம் திரும்பிய மருத்துவ மாணவி பேட்டி

மாணவி சாரா

மாணவி சாரா

தற்போது உள்ள காலத்தில் உக்ரைன் ரஷ்யா இடையே எப்படி போர் மூளும் , போர் வராது என்று மாணவர்கள் எண்ணி கொண்டிருந்தனர் என்று கூறும் மாணவி, இந்தியாவைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் உக்ரைனில் சிக்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

உக்ரைனின் ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் சூழலில், ஓசூரை சேர்ந்த மருத்துவ மாணவி போர் தொடங்குவதற்கு ஒருநாள் முன்னதாக தமிழகம் திரும்பினார். போர் வரும் என நினைக்கவே இல்லை என்றும் பெற்றோரின் வற்புறுத்தல் காரணமாகவே தமிழகம் திரும்பியதாகவும் அவர் கூறினார்.

ஓசூர் நஞ்சுண்டேஸ்வரர் நகரை சேர்ந்தவர் ஜான் எபினேசர் ராஜா (50) இவரது மனைவி வனிதா லிடியா, இவர்களது மூத்த மகள் சாரா (21). இவர் உக்ரைனில் கார்க்கிவ் என்ற இடத்தில் மருத்துவ கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். உக்ரைன் ரஷ்யா இடையே பிரச்சனைகள் தொடங்கி போர் சூழல் ஏற்பட்டதை அடுத்து கடும் அச்சமடைந்த ஜான் எபினேசர் வனிதா தம்பதியினர் தங்களது மகளை அங்கிருந்து தமிழகம் அழைத்து வர பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர்.

அதனைத்தொடர்ந்து கடந்த 23ஆம் தேதி போர் துவங்குவதற்கு ஒரு நாளைக்கு முன்பு உக்ரைனில் இருந்து சாரா விமானம் மூலம் தமிழகம் திரும்பினார்.  சென்னையில் இருந்து அவர்  ஓசூர் வந்தடைந்தார் அவரை பெற்றோர்கள் கட்டி அணைத்து வரவேற்றனர். உக்ரைன் நிலவரம் குறித்து நம்மிடம் பேசிய மாணவி சாரா,  ‘ தற்போது உள்ள காலத்தில் உக்ரைன் ரஷ்யா இடையே எப்படி போர் மூளும் , போர் வராது என்று மாணவர்கள் எண்ணி கொண்டிருந்தனர்.

இதையும் படிங்க: 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்

ஆனால் என்னை பெற்றோர்கள் கண்டிப்பாக நாடு திரும்ப வேண்டும் என வற்புறுத்தியதால் கடும் போராட்டத்துக்கு இடையே விமான டிக்கெட் பெற்று போருக்கு ஒரு நாளைக்கு முன்பு தமிழகம் வந்தேன். தற்போது விமான டிக்கெட் கூடுதலாக உள்ளது. நான் வரும்போது கூட இரண்டு மடங்கு கொடுத்துத்தான் வந்தேன்’ என்று தெரிவித்த மாணவி,  அவர் இந்தியாவிற்கு புறப்படும்போது உக்ரைனில் நிலைமை சாதாரணமாக இருந்ததாகவும் தற்போது தன்னுடம் படிக்கும் மற்ற மாணவர்கள் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்கள் அங்கு பாதுகாப்பு இல்லாமல் சிக்கி உள்ளதாக தெரிவித்தார். ஓசூரை சேர்ந்தவர்களும் 5 பேர் உள்ளதாகவும்மாணவி குறிப்பிட்டார்.

செய்தியாளர்: செல்வா - ஓசூர்

உக்ரைனில் வாழும் தமிழர்கள் உதவிக்கு தொடர்பு கொள்ள

உதவி எண் : +91 9940256444 / +91 9600023645, 044-2851 5288

மின்னஞ்சல் : nrtchennai@tn.gov.in / nrtchennai@gmail.com

வலைதளம் : https://nrtamils.tn.gov.in

Facebook : https://www.facebook.com/nrtchennai1038

Twitter : @tamiliansNRT

மத்திய வெளியுறவுத்துறை உதவி எண்கள்: 

1800118797 (Toll free)

+91-11-23012113, +91-11-23014104, +91-11-23017905

மின்னஞ்சல்: situationroom@mea.gov.in

First published:

Tags: Hosur, Russia - Ukraine, Tamilnadu