கள்ள நாட்டுத் துப்பாக்கிகளை வைத்திருந்தோர் தாமாக முன்வந்து வனத்துறையிடம் ஒப்படைப்பு

ஒசூரில் கள்ளநாட்டுத் துப்பாக்கிகளை வைத்திருந்தோர் தாமாக முன்வந்து வனத்துறையிடம்  ஒப்படைத்துள்ளனர்.

கள்ள நாட்டுத் துப்பாக்கிகளை வைத்திருந்தோர் தாமாக முன்வந்து வனத்துறையிடம் ஒப்படைப்பு
கள்ளநாட்டுத் துப்பாக்கிகளை வைத்திருந்தோர் தாமாக முன்வந்து வனத்துறையிடம்  ஒப்படைத்துள்ளனர்
  • News18
  • Last Updated: August 14, 2020, 3:47 PM IST
  • Share this:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வனக்கோட்டம் உரிகம் மற்றும் அஞ்செட்டி வனப்பகுதியில் கடந்த மாதம் இறந்த யானையின் உடலில் இருந்து தந்தங்கள் திருடப்பட்டிருந்தது. இதுகுறித்து வநத்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து ஒருவரை கைது செய்து தந்தங்களை மீட்டெடுத்தனர்.

இந்த நிலையில் இதே வனச்சரகத்தில் கள்ளத் துப்பாக்கிகளை பலரும் வைத்திருப்பதாகவும் ஊரடங்கு காலத்தில் அதை வேட்டைக்காக பயன்படுத்தி வருவதாகவும் கிடைத்த தகவலின் அடிப்படையில் வனத்துறை மற்றும் காவல்துறை இணைந்து ரோந்துப் பணிகளை தீவிரப்படுத்தியிருந்தனர்.

ஓசூர் வனக்கோட்ட உதவி வனக்காப்பாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு ஊர்மக்களிடன் உரிய அனுமதியின்றி வைத்துள்ள கள்ளநாட்டுத் துப்பாக்கிகளை மக்கள் தாமாக முன்வந்து ஒப்படைக்குமாறு விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.


Also read... திருப்பூரில் போலி ஆவணங்கள் மூலம் ₹ 50 கோடி ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பு - தொழிலதிபர் உள்பட 2 பேர் கைது

இதன் பயனாக ஈரண்ணன்தொட்டி, உரிகம், பிலிக்கல் மற்றும் பீர்ணம்பள்ளி ஆகிய கிராமத்தைச் சேர்ந்த சிலர் தாங்கள் வைத்திருந்த 10 கள்ளத் துப்பாகிகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட கவுன்சிலர் பழனி, உரிகம் பஞ்சாயத்துத் தலைவர் மாதேவய்யா ஆகியோர் முன்னிலையில் கடந்த ஆகஸ்ட் 4ஆம் தேதி   காவல்துறை மற்றும் வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.தொடர் விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பின் காரணமாக இன்று உரிகம் சரகத்தில் 6, தேன்கனிக்கோட்டை சரகத்தில் 12,  ஓசூர் சரகத்தில் 1 என மொத்தமாக 19 நாட்டுத் துப்பாக்கிகளை ஓசூர் வன உயிரினக் காப்பாளர் மற்றும் தேன்கனிக்கோட்டை துணை காவல்துறை கண்காணிப்பாளர் முன்னிலையில் கிராம மக்கள் ஒப்படைத்தனர்.
First published: August 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading