குணமடைந்து இன்று வீடு செல்ல இருந்த நிலையில் சோகம்.. ஓபிஎஸ் மனைவி இறப்பு குறித்து மருத்துவமனை விளக்கம்

ஓ.பன்னீர்செல்வம் மனைவி விஜயலட்சுமி

ஓ.பன்னீர்செல்வம் மனைவி விஜயலட்சுமி இறப்பு குறித்து மருத்துவமனை நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.

  • Share this:
    அதிமுக ஒருங்கிணைப்பாளரும், எதிர்கட்சி துணைத் தலைவருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி (66). கடந்து ஒரு வாரம் வயிறு உபாதை காரணமாக பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார், இன்று காலை சிகிச்சையின் போது மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.

    இந்நிலையில் ஒபிஎஸ் மனைவி விஜயலட்சுமி இறப்பு குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில். தமிழக முன்னாள் முதல்வர் மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் அவர்களின் மனைவி விஜயலட்சுமி(66) உடல்நலக்குறைவால் சென்னை ஜெம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த 10 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். உடல்நலமடைந்து, மருத்துவமனையிலிருந்து இன்று வீடு திரும்ப இருந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை 5 மணியளவில் தீவிர மாரடைப்புக்குள்ளானார். உடனடியாக இதயநோய் நிபுணர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பயனின்றி காலை 6.45 காலமானார் என்று தெரிவித்துள்ளனர்.



    ஓ.பன்னீர்செல்வம் மனைவி இறந்த தகவல் அறிந்து சட்டப்பேரவைக்கு வருகை தந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மருத்துவமனைக்கு புறப்பட்டு சென்றனர்.

    Also Read  :  ரகசியம்.. பரம ரகசியம்: சட்டப்பேரவையில் பாடிய பாடல் குறித்து ஓபிஎஸ் தகவல்!

    பெருங்குடியில் தனியார் மருத்துவமனைக்கு சென்ற எடப்பாடி பழனிசாமி ஓ.பன்னீர்செல்வம் மனைவி விஜயலட்சுமிக்கு அஞ்சலி செலுத்தினார். முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனைக்கு சென்று ஒ.பன்னீர்செல்வத்திற்கு ஆறுதல் கூறினார். மேலும் முதல்வர் ஸ்டாலின் உடன் அமைச்சர்கள் துரைமுருகன், மா.சுப்ரமணியன் ஆகியோரும் வருகை தந்தனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vijay R
    First published: