• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ரஜினிகாந்த் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை தகவல் - அமைச்சர் மா. சுப்பிரமணியன்

ரஜினிகாந்த் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை தகவல் - அமைச்சர் மா. சுப்பிரமணியன்

ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த் வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

  • Share this:
    நடிகர் ரஜினிகாந்த் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம்  கூறியதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

    சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உலக பக்கவாத கையேட்டை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார். முன்னதாக ஸ்டான்லி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்ட பாக்கவாத நோய் விழிப்புணர்வு, பாதுகாப்பான தீபாவளியை கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு காட்சியை பார்வையிட்டார். தொடர்ந்து ராஜீவ் காந்தி மருத்துவமனை சார்பில் பக்கவாத விழிப்புணர்வு வாகனங்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கொடியசைத்து தொடங்கிவைத்தார். இந்நிகழ்வில் வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐடீரிம்ஸ் மூர்த்தி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்மா.சுப்பிரமணியன், “பாக்கவாதம் நோயால் உலகம் முழுவதும் 6 கோடி பேர் பாதிக்கப்பட்டு 1.5 கோடி பேர் உயிரிழக்கின்றனர். இந்தியாவில் 6 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு 1.5 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் பக்கவாத நோய்க்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.இந்தியாவில் 4 பேரில் ஒருவருக்கு பக்கவாத நோய் அச்சுறுத்தல் உள்ளது. தலைவலி, பார்வை மங்கல், கை, கால் உணர்ச்சியிழப்பு போன்ற அறிகுறிகள் தெரிந்தவுடன் உடனடியாக மருத்துவமனைக்கு வருவது அவசியம். இந்த நோயின் பாதிப்பு முதல் 4 மணி நேரத்தில் தெரிந்து மருத்துவமனைக்கு சென்றால் குணப்படுத்த முடியும் என பேசினார்.

    பக்கவாதம் நோய்க்கான மருந்து செலுத்த 35 ஆயிரம் வரை செலவாகும் என்றும் இதற்கான மருந்துகள் அனைத்து வட்டார மருத்துவமனைகளில் உள்ளது. அறிகுறிகள் தெரிந்தவுடன் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.தமிழகத்தில் AY4.2 என்ற புதிய வகை வைரஸ் தொற்று இல்லை என்றும் மகாராஷ்டிரா, கர்நாடக மாநிலங்களில் கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பாகுப்பாய்வு மையத்தில் மாதிரிகளை சோதனை செய்ததில் AY4 என்ற வைரஸ் கண்டறியப்படவில்லை என தெரிவித்தார்.

    மேலும், நடிகர் ரஜினிகாந்த் வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது நலமுடன் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: