முகப்பு /செய்தி /தமிழ்நாடு / நாடு முழுவதும் அதிகரிக்கும் காய்ச்சல்... மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவுறுத்தல்..!

நாடு முழுவதும் அதிகரிக்கும் காய்ச்சல்... மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவுறுத்தல்..!

மாதிரி படம்

மாதிரி படம்

மருத்துவமனைகளில் மருந்துகள், ஆக்சிஜன் உள்ளிட்டவை போதிய அளவில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் இன்புளுயன்சா வைரஸ் காய்ச்சல் பரவல் பல்வேறு மாநிலங்களிலும் அதிகரித்துள்ளதாகவும்,

குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் அதிகம் பாதிக்கப்படுவதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் 3 ஆயிரத்து 38 பேர் இன்புளுயன்சா வைரஸ் காய்ச்சலால் பாதிக்க்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது. நடப்பாண்டு ஜனவரியில் 1,245 பேருக்கும் பிப்ரவரியில் 1,307 பேருக்கும் மார்ச் மாதத்தில் 486 பேருக்கும் இன்புளுயன்சா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வைரஸ்களால் காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் இருக்கக்கூடும் எனவும் வயதானவர்கள், இணை நோய் இருப்போர், கர்ப்பிணிகளுக்கு பாதிப்புகள் சற்று கடுமையாக இருக்கக்கூடும் என்பதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறலாம் எனவும் குறிப்பிட்டுள்ளது. இதே போல, நாடு முழுவதும் கொரோனா பாதிப்பும் சற்று அதிகரித்துள்ளதால், கைகழுவுதல், முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு வழிமுறைகளை கடைபிடித்தால் இன்புளூயன்சா வைரஸ் தாக்கத்தையும் தடுக்கலாம் என கூறியுள்ளது.

காய்ச்சல் பாதிப்பை மாநில அரசுகள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் எனவும், பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. மருத்துவமனைகளில் மருந்துகள், ஆக்சிஜன் உள்ளிட்டவை போதிய அளவில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

First published:

Tags: Central govt, Virus