துாத்துக்குடியில் ரூ.144 கோடி இரிடியத்தை விற்க முயற்சி... சிக்கிய அமமுக பிரமுகர்...

துாத்துக்குடியில் ரூ.144 கோடி இரிடியத்தை விற்க முயற்சி... சிக்கிய அமமுக பிரமுகர்...

துாத்துக்குடி அருகே 144 கோடி ரூபாய் மதிப்புள்ள இரிடியத்தை விற்க வந்த நபர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர்; இரிடியம் விற்க வந்தவர்கள் யார்? வாங்க திட்டமிட்டவர்கள் யார்?

துாத்துக்குடி அருகே 144 கோடி ரூபாய் மதிப்புள்ள இரிடியத்தை விற்க வந்த நபர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர்; இரிடியம் விற்க வந்தவர்கள் யார்? வாங்க திட்டமிட்டவர்கள் யார்?

 • Share this:
  தூத்துக்குடியில் மர்ம நபர்கள் சிலர் 144 கோடி ரூபாய் மதிப்புள்ள இரிடியம் விற்க வந்திருப்பதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில், தாளமுத்து நகர் வட்டக்கோவில் அருகே, டிடிவி தினகரனின் அமமுக கொடி கட்டப்பட்டிருந்த காரில் பதுங்கியிருந்த ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துாரைச் சேர்ந்த முத்துராமலிங்கம், காரைக்குடியைச் சேர்ந்த வைத்தியலிங்கம், துாத்துக்குடியைச் சேர்ந்த மரியதாஸ் மற்றும் முருகன் ஆகிய நான்கு பேரைத் தனிப்படை போலீசார் சுற்றிவளைத்துக் கைது செய்தனர். கைதானவர்களில் முத்துராமலிங்கம் என்பவர் முதுகுளத்துார் அமமுக ஒன்றியச் செயலாளர் என்பது தெரியவந்துள்ளது. அவர்களிடம் இருந்து 2 வீச்சரிவாள்கள், 6 கண்ணாடிக் குப்பிகள், சிடி-க்கள் ஆகியவைக் கைப்பற்றப்பட்டன.

  முதற்கட்ட விசாரணையில், கண்ணாடிக் குப்பிகளில் இருப்பது இரிடியம் என்றும், 144 கோடி ரூபாய் மதிப்புள்ளது என்றும் துாத்துக்குடியில் ஒரு நபரிடம் விற்பதற்காக இவர்கள் வந்துள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. மேலும் சமீபத்தில் மும்பையில் இருந்து திருடு போன இரிடியம் இதுதான் என்றும், இதை பட்டுக்கோட்டையில் ஒரு நபரிடம் வாங்கியதாவும் தகவல் பரப்பி வந்துள்ளனர்.

  மேலும் படிக்க...தலையை துண்டித்து அதிமுக பிரமுகர் கொலை : முன்விரோதத்தால் செங்கல்பட்டில் பயங்கரம்  இவர்கள் சொன்னது இரிடியம் தானா என்பதை ஆய்வு செய்ய தடவியல் ஆய்வகத்திற்கு கண்ணாடிக் குப்பிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. கைதானவர்கள் யாரிடம் இந்தப் பொருளை வாங்கினர்? யாரிடம் விற்பதற்காக வந்தனர் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
  Published by:Vaijayanthi S
  First published: