• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • குதிரை பந்தயத்தையும், ஆன்லைன் ரம்மியையும் ஒன்றாக கருத முடியாது- சென்னை உயர் நீதிமன்றம்

குதிரை பந்தயத்தையும், ஆன்லைன் ரம்மியையும் ஒன்றாக கருத முடியாது- சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை உயர்நீதிமன்றம்.

சென்னை உயர்நீதிமன்றம்.

குதிரை பந்தயத்தில் கலந்து கொள்வதும், உட்கார்ந்த இடத்திலேயே ரம்மி விளையாடுவதையும் ஒன்றாக கருதமுடியாது

  • Share this:
    ஆன்லைன் ரம்மியை தடை செய்த அவசர சட்டத்தை எதிர்த்த வழக்குகளில் பதிலளிக்க தமிழக அரசுக்கு இறுதி அவகாசம் வழங்கிய சென்னை உயர் நீதிமன்றம், குதிரை பந்தயத்தில் கலந்து கொள்வதும், உட்கார்ந்த இடத்திலேயே ரம்மி விளையாடுவதையும் ஒன்றாக கருதமுடியாது என்று கூறியது. மேலும் இறுதி விசாரணைக்காக, வழக்கை ஜனவரி 18ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

    ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்த தமிழக அரசின் அவசர சட்டத்தை எதிர்த்து ஜங்லி கேம்ஸ், ப்ளே கேம்ஸ், ரீட் டிஜிட்டல் ஆகிய நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்த வழக்குகளில் தமிழக அரசு பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

    இந்நிலையில், கேம்ஸ்கிராப்ட் டெக்னாலஜிஸ் என்ற நிறுவனமும் புதிதாக வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்குகள் நீதிபதிகள் சுப்பையா மற்றும் சரவணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது கேம்ஸ்கிராப்ட் தரப்பில் வெளியில் சென்று ரம்மி விளையாடுவதைவிட ஆன்லைனில் விளையாடுவது பாதுகாப்பானதுதான் என்றும், ரம்மி என்பது விளையாட்டு மட்டுமல்ல, திறமையை வளர்க்கக்கூடியது என்று வாதிடப்பட்டது.

    கடுமையான நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பது தொடர்பாக குதிரை பந்தய வழக்குகளில் முன்னுதாரணங்கள் உள்ளதால் வழக்கு முடியும்வரை இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டுமெனவும் வாதிடப்பட்டது. தமிழக அரசு தரப்பில், ஏற்கனவே தொடர்ந்த வழக்குகளில் பதிலளிக்கவும், இறுதி வாதங்களை வைப்பதற்கும் மேலும் அவகாசம் வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது.

    குதிரை பந்தயமும், ரம்மியும் ஒன்றாக கருத முடியாது எனவும், பெற்றோரின் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி பிள்ளைகள் ஆன்லைன் ரம்மி விளையாடுவதாக குற்றம்சாட்டினார். அவசர சட்டத்துக்கு பதிலாக ஜனவரி முதல் வாரத்தில் சட்டம் இயற்றப்படும் என்பதால் அதன்பின்னர் பதிலளித்து, இறுதி வாதங்களை முன்வைக்க தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

    குதிரை பந்தயத்தில் கலந்து கொள்வதும், உட்கார்ந்த இடத்திலேயே ரம்மி விளையாடுவதையும் ஒன்றாக கருதமுடியாது என தெரிவித்த நீதிபதிகள், அவசர சட்டத்தை எதிர்த்த வழக்குகளில் தமிழக அரசு பதிலளிக்க இறுதி அவகாசம் வழங்கி, இறுதி விசாரணையை ஜனவரி 18ம் தேதி தள்ளிவைத்தனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: