ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

மீண்டும் ஆணவப் படுகொலை: தந்தையே மகளைக் கொன்ற கொடூரம்!

மீண்டும் ஆணவப் படுகொலை: தந்தையே மகளைக் கொன்ற கொடூரம்!

கோப்புப்படம்

கோப்புப்படம்

வேற்று சாதியைச் சேர்ந்தவரைக் காதலித்ததால் தனது மகளை தந்தையே கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  காதலனையே கரம் பிடிப்பேன் என்று குடும்பத்தாருடன் வாக்குவாதம் செய்த மாணவி கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  ஆந்திராவின் பிரகாசம் மாவட்டம் தாலூரு மண்டலம் கொத்த பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கட் ரெட்டி. இவரது மகள் வைஷ்ணவி ஓங்கோலில் இருக்கும் தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். அதே கல்லூரியில் படிக்கும் மாணவர் ஒருவருடன் வைஷ்ணவிக்கு காதல் ஏற்பட்டது.

  காதலனை கரம் பிடிக்க முடிவு செய்த வைஷ்ணவி வீட்டுக்குச் சென்று பெற்றோரிடம் தன்னுடைய காதலை தெரிவித்துள்ளார்.

  இரண்டு பேரும் வெவ்வேறு ஜாதியைச் சேர்ந்தவர் என்பதால் மகளின் காதலை ஏற்க பெற்றோர் மறுத்துவிட்டனர். ஆனால் வைஷ்ணவி காதலனையே கரம் பிடிப்பேன் என்று உறுதியாகக் கூறினார்.

  இதனால் ஆத்திரமடைந்த வைஷ்ணவியின் தந்தை வெங்கட் ரெட்டி, மகளை கழுத்து நெரித்து கொலை செய்ததாக கூறப்படுகிறது.

  வைஷ்ணவி கொலை செய்யப்பட்டது பற்றிய தகவல் அறிந்த தாலூரு போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணையைத் துவக்கி உள்ளனர்.

  சொத்துத் தகராறில் சகோதரியின் குடும்பத்தை கூலிப்படையை ஏவி கொல்ல முயன்ற சகோதரன் - வீடியோ

  Published by:Sheik Hanifah
  First published:

  Tags: Andhra Pradesh, Honor killing