• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஆணவக்கொலை தாக்குதலில் படுகாயமடைந்த தர்ஷினி ப்ரியா சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

ஆணவக்கொலை தாக்குதலில் படுகாயமடைந்த தர்ஷினி ப்ரியா சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

தர்ஷினி பிரியா

தர்ஷினி பிரியா

காதலன் கனகராஜ் உயிரிழந்த நிலையில், காதலித்த பெண் தர்ஷினி ப்ரியாவும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    மேட்டுப்பாளையத்தில் வேறு சாதி பெண்ணை திருமணம் செய்த இளைஞர், சகோதரனால் கொல்லப்பட்ட நிலையில், தாக்குதலின்போது காயமடைந்த பெண்ணும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள வெள்ளிப்பாளையம் சிரங்கராயன் ஓடை பகுதியைச் சேர்ந்த கருப்புசாமி என்பவரது மகன்கள் வினோத் மற்றும் கனகராஜ். கூலித் தொழிலாளியான கனகராஜ், அதே பகுதியில் வசிக்கும் தர்ஷினி ப்ரியா என்ற பெண்ணை காதலித்து வந்தார்.

    இருவரும் வேறு வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் தம்பியின் காதலுக்கு அண்ணன் வினோத் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தார். சாதியை காரணம் காட்டி எழுந்த மோதலால், தம்பி கனகராஜ் வீட்டை விட்டு வெளியேறி, காதலித்த பெண்ணை கரம் பிடித்தார்.

    இதனால், ஆத்திரமடைந்த வினோத், கடந்த 25ஆம் தேதி தனது சகோதரர் கனகராஜை அரிவாளால் வெட்டி கொலை செய்தார். இதனை தடுக்க முயன்ற அவரது காதலி தர்ஷினி ப்ரியாவும் வெட்டப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    ஆணவக் கொலை செய்த வினோத்தை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில், கடந்த 4 நாட்களாக தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த தர்ஷினி ப்ரியா, நேற்று நள்ளிரவு 12 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    ஏற்கனவே, காதலன் கனகராஜ் உயிரிழந்த நிலையில், காதலித்த பெண் தர்ஷினி ப்ரியாவும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Also see...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: