ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஆணவ கொலை: பெண்ணின் தந்தை உள்பட 3 பேரிடம் தீவிர விசாரணை!

ஆணவ கொலை: பெண்ணின் தந்தை உள்பட 3 பேரிடம் தீவிர விசாரணை!

சடலமாக மீட்கப்பட்ட தம்பதி

சடலமாக மீட்கப்பட்ட தம்பதி

சாதிமறுப்பு திருமணம் செய்து கொண்ட நந்தீஷ்- ஸ்வேதா சடலமாக மீட்கப்பட்டது பல தரப்பினரையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

சாதி ஆணவத்தின் காரணமாக காதல் தம்பதியை ஈவிரக்கமின்றி படுகொலை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ள பெண்ணின் தந்தை மற்றும் உறவினர்கள், விசாரணைக்காக ஓசூருக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். 

ஓசூரில் பட்டியலின வகுப்பைச் சேர்ந்த நந்தீஷ் என்ற இளைஞரை, ஸ்வேதா என்பவர் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டார். இதனால், ஆத்திரமடைந்த ஸ்வேதாவின் தந்தை சீனிவாசன், உறவினர் கிருஷ்ணன், வெங்கடேசன் ஆகிய 3 பேர், காதல் தம்பதியை கடத்தி கர்நாடகாவில் வைத்து கொடூரமாக கொலை செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.

இந்தநிலையில், பலத்த பாதுகாப்புகளுக்கிடையே குற்றம் சாட்டப்பட்டவர்களை தமிழக போலீசார் ஓசூருக்கு அழைத்து வந்துள்ளனர். ராம் நகர், புனுகன் தொட்டி ஆகிய கிராமங்களில் வைத்து அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்றது.

குற்றம்சாட்டப்படும் கிருஷ்ணன், ராம் நகரிலேயே தங்கியிருந்து அடிக்கடி நந்தீஷ் - ஸ்வேதா தம்பதியை கவனித்து வந்தது இந்த விசாரணையில் தெரியவந்துள்ளது. இருவரையும் எவ்வாறு கடத்தினர்?, கொலை எப்படி நடைபெற்றது? என்பதை போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Also see... ஒன் பிளஸ் ஒன்" கருவை தழுவியதா ”திமிரு புடிச்சவன்”

' isDesktop="true" id="70175" youtubeid="zMJqKG8HfP8" category="tamil-nadu">

First published:

Tags: Honour killing