ஆணவக் கொலைகளை தடுப்பது குறித்து தமிழக காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி

News18 Tamil
Updated: July 31, 2019, 9:17 AM IST
ஆணவக் கொலைகளை தடுப்பது குறித்து தமிழக காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி
சென்னை உயர்நீதிமன்றம்
News18 Tamil
Updated: July 31, 2019, 9:17 AM IST
ஆணவக் கொலைகளை தடுப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.

ஆணவக் கொலைகளை தடுப்பது தொடர்பாக உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது, அனைத்து காவல் நிலையங்களிலும் சிறப்பு பிரிவுக்கு என தனியாக காவலர்கள் இல்லாததால் ஆணவக் கொலை வழக்குகளை சட்டம்- ஒழுங்கு வழக்குகளை விசாரிக்கும் காவலர்களே விசாரிப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


இதையடுத்து அவர்கள் எப்படி சிறப்பு பிரிவாக கருத முடியும் என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ஆணவக் கொலைகள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க தனி பிரிவு ஏற்படுத்தி, விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

ஆணவக் கொலைகளை தடுக்க நடவடிக்கை எடுக்க தவறினால், காவல்துறை உயரதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிடப்படும் என எச்சரித்த நீதிபதிகள் தீர்ப்பை இன்றைக்கு ஒத்திவைத்தனர்.

First published: July 31, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...