கோவை மலைக்கிராம மக்களுக்கு கைகொடுத்து வரும் தேனீ வளர்ப்பு...

Youtube Video

கொரோனா ஊரடங்கு காலத்தில், கோவை மலைக்கிராம மக்களுக்கு தேனீ வளர்ப்பு கைகொடுத்து வருகிறது.

 • Share this:
  கொரோனா பாதிப்பால் தொழில் நிறுவனங்கள் முடங்கியிருக்கும் சூழலில், பலர் வேலைவாய்ப்பை இழந்து தவிக்கின்றனர். ஊரடங்கு கட்டுப்பாடுகளால் பெரும்பாலான தொழிற்சாலைகள் முழுமையாக இயங்காததால், ஏராளமான தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். அன்றாடம் குடும்பம் நடத்தவே அறக்கட்டளைகளையும், தன்னார்வலர்களையும் எதிர்பார்த்து காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

  இந்நிலையில், ஊரடங்கு கட்டுப்பாடுகளால், கோவை மாவட்டம் போளுவாம்பட்டி வனச்சரகத்துக்கு உட்பட்ட மலைக்கிராம மக்கள் வீடுகளில் முடங்கினர். வாழ்வாதாரத்தை இழந்த சீங்கப்பதி, சாடிவயல், தாணிக்கண்டி, வெள்ளப்பதி உள்ளிட்ட 14 மலை கிராம மக்களுக்கு உதவ வனத்துறையினர் முன்வந்தனர்.

  மேலும் படிக்க... earthquake | அருணாச்சல பிரதேசம், மணிப்பூர் மாநிலத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கம்

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

  அதன்படி கிராம மக்களுக்கு தேனீக்கள் வளர்ப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா 9 பெட்டிகள் வழங்கப்பட்டன. தேனீக்களை வளர்க்க பயிற்சி அளிக்கப்பட்டு, பராமரிப்பு மற்றும் தேன் எடுக்கும் முறைகள் குறித்தும் கற்பிக்கப்பட்டது. இதன் பிரதிபலனாக கிராம மக்கள் தேன் விற்று பணம் சம்பாதிக்க தொடங்கியுள்ளனர். தேனீக்கள் வளர்ப்பால் கிடைக்கும் வருவாய் மூலம், ஓரளவுக்கு நிதி பற்றாக்குறையை சமாளிப்பதாக தெரிவிக்கின்றனர் மலைகிராம மக்கள்.  ஒரு பெட்டிக்கு தலா 2 லிட்டர் தேன் கிடைப்பதாகவும், லிட்டர் தேன் 500 ரூபாய் முதல் 600 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாகவும் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும், இத்திட்டத்தை தங்கள் கிராமத்தில் அறிமுகப்படுத்திய வனத்துறைக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக கூறுகின்றனர். ஊரடங்கால் வேலை இல்லாவிட்டாலும், தேனீ வளர்ப்பு தங்களுக்கு பெரும் உதவியாக இருப்பதாக போளுவாம்பட்டி கிராம மக்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.
  Published by:Vaijayanthi S
  First published: