ஆர்சனிக் ஆல்பம் 30சி கொரோனாவுக்கு எதிராக எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது - ஹோமியோபதி மருத்துவக் கவுன்சில் தலைவர்

மூன்று நாட்களுக்கு தினமும் 4 மாத்திரை சாப்பிட்டால் எந்த பக்கவிளைவும் இல்லாமல் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

ஆர்சனிக் ஆல்பம் 30சி கொரோனாவுக்கு எதிராக எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது - ஹோமியோபதி மருத்துவக் கவுன்சில் தலைவர்
கொரோனா வைரஸ்.
  • Share this:
ஹோமியோபதி முறையில் ஆர்சனிக் ஆல்பம் 30சி என்ற மாத்திரை கொரோனாவிற்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் உருவாக்குவதால் நல்ல பலனை கொடுப்பதாக ஹோமியோபதி மருத்துவ கவுன்சில் தலைவர் ஞானசம்பந்தம் கூறியுள்ளார்.

கொரோனா பாதிப்புகளைக் கட்டுப்படுத்த நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக ஆர்சனிக் ஆல்பம் 30 சி ஹோமியோபதி மாத்திரையை தமிழக அரசு வழங்கிவருகிறது. இந்த மாத்திரை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து சிறந்த முறையில் செயல்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து தெரிவித்த ஹோமியோபதி மருத்துவர் மோனலிஸா ஜான், ‘உலகளவில் ஹோமியோபதி மருத்துவம் இரண்டாம் இடத்தில் உள்ளது. நோய் தொற்று பாதிப்பு அதிகம் இருக்கும் இடங்களில் ஆய்வு செய்யும்போது ஆர்செனிக் ஆல்பம் 30சி மாத்திரையை சாப்பிடவர்களுக்கு நோய் தொற்று ஏற்படவில்லை என ஆதாரப்பூர்வமாக மருத்துவ ஆய்வுகள் உள்ளது. எனவே கட்டாயம் இந்த மருந்தை எடுக்கலாம்’ என்றார்.


ஆர்சனிக் ஆல்பம் 30சி குறித்து தெரிவித்த ஹோமியோபதி மருத்துவக் கவுன்சில் தலைவர் ஞானசம்பந்தம், ‘மத்திய மாநில அரசால் அங்கீகாரம் பெற்ற மருந்து என்பதால் யார் வேண்டுமானாலும் இந்த மருந்தை சாப்பிடலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எந்த பயமும் இல்லாமல் எடுத்துக்கொள்ளலாம். மூன்று நாட்களுக்கு தினமும் 4 மாத்திரை சாப்பிட்டால் எந்த பக்கவிளைவும் இல்லாமல் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்’ என்று தெரிவித்தார்.

இதுகுறித்து தெரிவித்த ஹோமியோபதி மருத்துவர் கோபால், காலையில் வெறும் வயிற்றில் 4 மாத்திரைகளை தண்ணீர் இல்லாமல் சுவைத்து சாப்பிட வேண்டும். இனிப்பு சுவை கொண்டது என்பதால் குழந்தைகளும் சுவைத்து சாப்பிடும்’ என்று விளக்கினார்.சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.Also see:
First published: May 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading