Home /News /tamil-nadu /

முகப்பருக்களை நீக்க வீட்டுக் குறிப்புகள்!

முகப்பருக்களை நீக்க வீட்டுக் குறிப்புகள்!

டீன் ஏஜ் பருவத்திலிருந்து தொடங்கும் முகப்பருக்கள் முதுமை வரை வயது வரம்பு பாராமல் தொடரும்.  அது முக அழகையும் கெடுத்துவிடும். எனவே வீட்டு உபயோகப் பொருட்களைக் கொண்டு முகப்பருக்களை எவ்வாறு நீக்கலாம் என்பதைக் காணலாம்.

  • Last Updated :

முகப்பருக்கள் வருவதற்கான காரணங்கள்:

முகத்தில் உள்ள தூளைகள் நல்ல சுவாசம் பெற்றால்தான் முகம் தெளிவாக இருக்கும்.  ஆனால் பெண்கள் மேக்அப் மூலம் அப்ளை செய்யும் பல லேயர்கள் சருமத் தூளைகளை மூடிக் கொள்கின்றன. இதனால் சருமம் பாதிப்படைந்து முகப்பருக்கள் வருகின்றன. இறந்த செல்கள் குவிந்து சருமத் துளைகளை மூடிக் கொள்வதாலும் முகப்பருக்கள் வரும். சிலருக்கு காற்று மாசுபாடு காரணமாக முகப்பருக்கள் வரலாம்.டீன் ஏஜ் வயதினருக்கு இரசாயன மாற்றங்கள் காரணமாக முகப்பருக்கள் வருகின்றன. ஆண்களுக்கு இயற்கையாக முகத்தில் வடியும் எண்ணெய் காற்று உட்புகாதவறு சருமத் துளைகளை மூடிக் கொள்கின்றன. அதனால் ஆண்களுக்கும் இந்த சிக்கல் இருக்கிறது.

முகப்பருக்களைத் தடுக்கும் வீட்டுக் குறிப்புகள்:

க்ரீன் டீ

க்ரீன் டீயில் ஆண்டி மைக்ரோபையல் மற்றும் ஆன்டி ஆக்ஸிடண்ட் இருப்பதால் முகப்பருக்களை நீக்கும் வல்லமை உண்டு. க்ரீன் டீ தூளை குளிர்ந்த நீரில் கொட்டி அந்த நீரால் முகத்தைக் கழுவி வந்தால் முகப்பருக்கள் குறையும். அல்லது க்ரீன் டீ பைகளை நனைத்து முகப்பரு உள்ள இடங்களில் ஒத்தடம் கொடுத்து 5 நிமிடங்கள் அந்தப் பையை அப்படியே முகத்தில் வைத்திருக்கலாம். இவ்வாறு தினமும் செய்வதால் முகப்பருக்கள் நீங்கும்.

தேன்

தேனில் இருக்கும் ஆண்டி பயோட்டிக் முகப்பருக்களை நீக்கும் ஆற்றல் உண்டு. ஒரு மேசைக் கரண்டி தேன் எடுத்துக்கொண்டு, அதை முகப்பருக்கள் உள்ள இடங்களில் தடவுங்கள். அல்லது தேன் மற்றும் ஓட்ஸ் கலவையை முகத்தில் மாஸ்க் போல் போட்டு ஐந்து நிமிடங்கள் கழித்துக் கழுவலாம். இவ்வாறு செய்வதாலும் முகப்பருக்கள் நீங்கி முகம் பொலிவு பெறும்.

புதினா

புதினாவை சாறு வரும்வரை நன்றாக கசக்கவும். பின் அதில் தயிர் மற்றும் ஓட்ஸ் கொண்டு பேஸ்ட் போல் கலக்கவும். அந்தப் பேஸ்ட்டை முகத்தில் மாஸ்க்காக போட்டு 10 நிமிடங்கள் காயவிடு குளிர்ந்த நீரில் கழுவவும்.

கற்றாழை

முகத்தில் இருக்கும் கிருமிகளை அழித்து, அழுக்குகளைப் போக்கும் ஆற்றல் கற்றாழையில் உண்டு. மேலும் இது சருமத்தை நன்கு சுவாசம் பெறச் செய்யும். கற்றாழையில் உள்ள சதைப் பகுதியை மட்டும் எடுத்து அதை நன்கு நீர் வரும் வரை பிசைந்து கொள்ளவும். தற்போது அந்த ஜெல்லை முகத்தில் தடவுங்கள். பின் 5 நிமிடங்கள் நன்கு காய்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவுங்கள். தினமும் காலை எழுந்ததும் இவ்வாறு செய்தால் நல்ல ரிசல்ட் கிடைக்கும். முகம் புத்துணர்ச்சியாக இருக்கும்.

எலுமிச்சை

எலுமிச்சை முகத்தில் உள்ள அழுக்குகளை நீக்கி புத்துணர்வை ஏற்படுத்தும். முகத்திற்கு நல்ல க்ளென்சர் போன்றது. எலுமிச்சை சாறை ஒரு கிண்ணத்தில் பிழிந்து கொள்ளவும். அந்த சாறை பஞ்சில் முக்கி முகப்பருக்கள் உள்ள இடங்களில் ஒத்தடம் கொடுக்கவும். பின் 5 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும். இவ்வாறு தினமும் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
First published:

அடுத்த செய்தி