ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஆயிரம் விளக்கு தொகுதியில் குஷ்புவுக்கு ஆதரவாக உள்துறை அமைச்சர் அமித்ஷா பிரச்சாரம்!

ஆயிரம் விளக்கு தொகுதியில் குஷ்புவுக்கு ஆதரவாக உள்துறை அமைச்சர் அமித்ஷா பிரச்சாரம்!

குஷ்புவுக்கு ஆதரவாக உள்துறை அமைச்சர் அமித்ஷா பிரச்சாரம்

குஷ்புவுக்கு ஆதரவாக உள்துறை அமைச்சர் அமித்ஷா பிரச்சாரம்

உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் எழும்பூர் வேட்பாளர் ஜான் பாண்டியன், சைதாப்பேட்டை தொகுதி வேட்பாளர் சைதை துரைசாமி, வேளச்சேரி வேட்பாளர் கே.பி.கந்தன் ஆகியோரும் உடன் சென்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் குஷ்புவை ஆதரித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று பிரச்சாரம் மேற்கொண்டார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 6) அன்று நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரம் நாளை இரவு 7 மணியுடன் நிறைவு பெற உள்ளது. இதனையடுத்து இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் வேட்பாளர்களும், தலைவர்களும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தேர்தல் பிரச்சாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் தேசிய தலைவர்கள் தமிழகத்தில் முகாமிட்டு பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக நேற்றிரவு சென்னைக்கு வருகை தந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, துறைமுகம் தொகுதி பாஜக வேட்பாளர் வினோஜ் செல்வத்தை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.

இதனையடுத்து இன்று காலை ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் குஷ்புவுக்கு ஆதரவாக அமித்ஷா பிரச்சாரம் செய்தார்.

மலர்களால் அலங்கரிகப்பட்ட திறந்த வாகனத்தில் காலை 11 மணியளவில் தேனாம்பேட்டையிலிருந்து ஊர்வலமாக சென்றார். அங்கிருந்து தி.நகர் பாண்டி பஜார் வரை ஊர்வலமாக சென்று தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் செய்தார். உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் எழும்பூர் வேட்பாளர் ஜான் பாண்டியன், சைதாப்பேட்டை தொகுதி வேட்பாளர் சைதை துரைசாமி, வேளச்சேரி வேட்பாளர் கே.பி.கந்தன் ஆகியோரும் உடன் சென்றனர்.

சென்னையில் பிரச்சாரத்தை முடித்துக்கொண்ட உள்துறை அமைச்சர் அமித்ஷா அங்கிருந்து நெல்லைக்கு புறப்பட்டு சென்றார். நெல்லை மாவட்டம் திருநெல்வேலி சட்டமன்ற தொகுதி பா.ஜ.க வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மற்றும் நாங்குநேரி தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் தச்சை கணேசராஜாவை ஆதரித்து நெல்லை மாவட்ட பா.ஜ.க சார்பில் தச்சநல்லூரில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா பங்கேற்றார். இந்தக் கூட்டத்தில் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஐந்து தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க மற்றும் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்கள் கலந்துகொள்வார்கள் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இருவர் மட்டுமே கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by:Arun
First published:

Tags: Amit Shah, Kushboo, Thousand Lights Constituency, TN Assembly Election 2021