கடலூர் அருகே உயர் மின் அழுத்தம் காரணமாக 100க்கும் மேற்பட்ட வீடுகளில் டிவி உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்கள் சேதம்!

கடலூர் அருகே உயர் மின் அழுத்தம் காரணமாக 100க்கும் மேற்பட்ட வீடுகளில் டிவி உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்கள் சேதம்!

தொடர்ந்து உயர் மின் அழுத்தம் ஏற்படாத வகையில் மின்சார வயர்களை சரி செய்ய வேண்டுமெனவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க கோரி அப்பகுதி மக்கள் மின்வாரிய அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர்.

  • Share this:
உயர் மின் அழுத்தம் காரணமாக 100க்கும் மேற்பட்ட வீடுகளில் டிவி மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் இருந்து கரும்புகை வெளியாகி பொருட்கள் சேதம் அடைந்ததால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள கோடங்குடி கிராமத்தில் காலை நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளிலிருந்து டிவி, மிக்சி மற்றும் குளிர்சாதன பெட்டியில் இருந்து கரும்புகை வெளியாகியுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியே வந்நுள்ளனர். அப்போது ஒருவருக்கு ஒருவர் எனது வீட்டில் டிவி வெடித்துவிட்டுது, எங்கள் வீட்டில் மிக்ஸி வெடித்துவிட்டது என கூறி அனைத்து பொருட்களை எடுத்து கொண்டு தெருவில் வைத்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பின்னர் அப்பகுதி மக்கள் மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த மின்சார வாரிய அதிகாரிகள் அப்பகுதிக்கு செல்லும் மின் இணைப்பை துண்டித்து ஆய்வு செய்தனர். இதில் உயர் மின் அழுத்தம் காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளிலிருந்து டிவி உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்கள் சேதம் அடைந்து இருப்பது தெரிய வந்தது.

தொடர்ந்து உயர் மின் அழுத்தம் ஏற்படாத வகையில் மின்சார வயர்களை சரி செய்ய வேண்டுமெனவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க கோரி அப்பகுதி மக்கள் மின்வாரிய அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர். ஒரே நேரத்தில் உயர் மின் அழுத்தம் அதிகமாக ஏற்பட்டதால் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் டிவி மற்றும் பிரிட்ஜ் உள்ளிட்ட மின் சாதனப் பொருட்கள் அனைத்தும் கரும்பு புகையோடு சேதமடைந்து இருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Also read: தந்தையுடன் வயலுக்கு சென்ற 10ம்வகுப்பு மாணவன் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததால் உயிரிழப்பு!

இந்த உயர் மின் அழுத்தம் பிரச்சனை என்பது கடந்த சில மூன்று மாதத்திற்கு மேலாக தங்கள் கிராமத்தில் நடைபெற்று வருவதாகவும் அவ்வப்போது இதுபோல் மின்சார உபயோகம் வீட்டு உபயோக பொருட்கள் சேதம் அடைந்து வருவதாகவும் இதனால் பெருமளவு பிரச்சனைகளை சமாளித்து வருவதாகவும் அந்த பகுதி மக்கள் கூறுகின்றனர்.

மேலும் கடந்த சில வாரமாக மின்சாரம் என்பது நிறுத்தி நிறுத்தி விட்டு விட்டு வழங்குவதால் இது போல் மின் அழுத்தம் ஏற்பட்டு வீட்டு உபயோகப் பொருட்கள் சேதமடைகிறது. எனவே மின்சாரத்தை சரியான முறையில் கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இதுபோல் மின்சாரத்தை நிறுத்தி நிறுத்தி கொடுப்பதால் வீட்டு உபயோக பொருட்கள் பாதிக்கப்படுவதோடு குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்படுகிறது. எனவே அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
Published by:Esakki Raja
First published: