ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

Holidays in Janurary : வருஷம் பொறந்த உடனே ஜனவரி மாதத்தில் மட்டுமே இத்தனை விடுமுறைகள்!

Holidays in Janurary : வருஷம் பொறந்த உடனே ஜனவரி மாதத்தில் மட்டுமே இத்தனை விடுமுறைகள்!

பண்டிகை கால விடுமுறை ஒவ்வொரு மாநிலத்திற்கும் வேறுபடலாம் என்பதையும் நாம் கவனத்தில் வைத்துக் கொள்வது அவசியம்.

பண்டிகை கால விடுமுறை ஒவ்வொரு மாநிலத்திற்கும் வேறுபடலாம் என்பதையும் நாம் கவனத்தில் வைத்துக் கொள்வது அவசியம்.

பண்டிகை கால விடுமுறை ஒவ்வொரு மாநிலத்திற்கும் வேறுபடலாம் என்பதையும் நாம் கவனத்தில் வைத்துக் கொள்வது அவசியம்.

  • 3 minute read
  • Last Updated :

2022 புத்தாண்டு வருவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இந்த புதிய ஆண்டாவது மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி விடுவோமா என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர். ஆனால் நம் நம்பிக்கையை உடைப்பது போல கொரோனாவின் புதிய தீவிர மாறுபாடான ஒமிக்ரான் வைரஸ் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளன. இருப்பினும் பல நாடுகளில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் இப்போதே ஆரம்பமாகி விட்டன. மேலும் பண்டிகை காலம் வந்துவிட்டாலே தங்கள் சொந்தபந்தங்களோடு ஒன்று சேர்ந்து விழாவை கொண்டாட எல்லோரும் ஆசைப்படுவர்.

ஏனெனில் பண்டிகை காலங்களில் அனைவருக்கும் விடுமுறை வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்தியா கலாச்சார ரீதியாக வேறுபட்ட நாடாக இருப்பதால், பண்டிகைகளும் விடுமுறை நாட்களும் அதிகம். அதன்படி, வருகிற புத்தாண்டின் ஜனவரி மாதத்தில் வரும் பொது விடுமுறைகளும், பண்டிகைக்கால விடுமுறைகள் பற்றியும் பின்வருமாறு காணலாம். பண்டிகை கால விடுமுறை ஒவ்வொரு மாநிலத்திற்கும் வேறுபடலாம் என்பதையும் நாம் கவனத்தில் வைத்துக் கொள்வது அவசியம்.

சொந்தமாக பிஸினஸ் தொடங்க ஆசையா? ஐசிஐசிஐ வங்கி ரூ. 25 லட்சம் வரை கடன் தர்றாங்க தெரியுமா?

* ஜனவரி 1ம் தேதி - சனிக்கிழமை : புத்தாண்டு தினம் (New year 2022). நாடு முழுவதும் விடுமுறை.

* ஜனவரி 2ம் தேதி - ஞாயிற்றுகிழமை: மன்னம் ஜெயந்தி. கேரள பண்டிகை.

* ஜனவரி 9ம் தேதி - ஞாயிற்றுகிழமை : சண்டிகர், ஹரியானாவில் குரு கோவிந்த் சிங் ஜெயந்தி கொண்டாடப்படும்.

* ஜனவரி 11ம் தேதி - செவ்வாய்கிழமை: மிஷனரி தினம். மிசோரம் மாநிலத்தில் விடுமுறை.

* ஜனவரி 12ம் தேதி - புதன்கிழமை: மேற்கு வங்கத்தில் சுவாமி விவேகானந்தர் ஜெயந்தி கொண்டாடப்படும்.

* ஜனவரி 14ம் தேதி - வெள்ளிக்கிழமை: மக் பிகு, மகர சங்கராந்தி, துசு பூஜை. இந்த பண்டிகை இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கொண்டாடப்படுகிறது.

* ஜனவரி 14ம் தேதி - வெள்ளிக்கிழமை: தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை.

* ஜனவரி 15ம் தேதி - சனிக்கிழமை: பொங்கல் பண்டிகை/ திருவள்ளுவர் தினம். தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேச மாநிலங்களில் கொண்டாடப்படும்.

* ஜனவரி 16ம் தேதி - ஞாயிற்றுகிழமை: கனும பண்டிகை, உழவர் திருநாள். ஆந்திரப் பிரதேசம், பாண்டிச்சேரி மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் கொண்டாடப்படும்.

* ஜனவரி 23ம் தேதி - ஞாயிற்றுக்கிழமை: நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஜெயந்தி மேற்கு வங்காளம், திரிபுரா, ஒடிசா மற்றும் அசாம் மாநிலங்களில் விடுமுறை.

* ஜனவரி 25ம் தேதி - செவ்வாய்கிழமை: இமாச்சல பிரதேசத்தில் மாநில தினம்

* ஜனவரி 26ம் தேதி - புதன்கிழமை: குடியரசு தினம். பொது விடுமுறை.

* ஜனவரி 31ம் தேதி - திங்கட்கிழமை: மீ-டேம்-மீ-ஃபை. அசாம் மாநிலத்தில் கொண்டாடப்படும்.

ஜனவரி 1 முதல் ஏடிஎம்மில் பணம் எடுத்தால் அதிக கட்டணம்.. வாடிக்கையாளர்களே உஷார்!

ஜனவரி 2022ல் வரும் வங்கி விடுமுறைகள்: (January 2022 - Bank Holidays)

இந்தியாவில் உள்ள வங்கிகள் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் மூடப்பட்டிருக்கும். இது தவிர, தேசிய விடுமுறைகள், பொது விடுமுறைகள் மற்றும் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும் பிராந்திய விடுமுறை நாட்களில் வங்கிகள் மூடப்படுவது வழக்கம். வங்கி விடுமுறை நாட்களை முன்கூட்டியே அறிந்துகொள்வது, உங்கள் வங்கிக்கான வருகைகளை முன்கூட்டியே திட்டமிட உதவும். அதன்படி, ஜனவரி 2022-ல் வரும் வங்கி விடுமுறைக்கான தேதிகள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளன:

* ஜனவரி 1ம் தேதி - சனிக்கிழமை: புத்தாண்டு தினம். நாடு முழுவதும் வங்கிகள் செயல்படாது.

* ஜனவரி 11ம் தேதி - செவ்வாய்கிழமை: மிஷனரி தினம். மிசோரத்தில் வங்கிகளுக்கு விடுமுறை.

* ஜனவரி 14ம் தேதி - வெள்ளிக்கிழமை: மகர சங்கராந்தி. பல மாநிலங்களில் வங்கிகள் செயல்படாது.

* ஜனவரி 14ம் தேதி - வெள்ளிக்கிழமை: பொங்கல் பண்டிகை. தமிழகத்தில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.

* ஜனவரி 15ம் தேதி - சனிக்கிழமை: பொங்கல் ஆந்திரப் பிரதேசம், புதுச்சேரி, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் வங்கிகள் செயல்படாது.

* ஜனவரி 26ம் தேதி - புதன்கிழமை: குடியரசு தினம் என்பதால் நாடு முழுவதும் வங்கிகள் செயல்படாது.

* ஜனவரி 31 தேதி - திங்கட்கிழமை: மீ-டேம்-மீ-ஃபை தினம். அசாமில் வங்கிகள் மூடப்படும்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published: