கனமழை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை

கனமழை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை

  • Share this:
புதுச்சேரியில் இரண்டாவது நாளாக மழை பெய்துவரும் நிலையில் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் நிவர் மற்றும் புரெவி புயல் காரணமாக தொடர்ந்து கனமழை பெய்துவந்த நிலையில் கடந்த சில நாட்களாக மழை ஓய்ந்திருந்து. இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் புதுச்சேரி நகரம் மற்றும் கிராம பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த தொடர் மழையால் நகரின் தாழ்வான பகுதிகளான ரெயின்போ நகர், பூமியின் பேட்டை, வெங்கட்டா நகர், கிருஷ்ணா நகர் ஆகிய பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது.

இந்நிலையில், புதுச்சேரியில்  உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். இதே போல் காரைக்காலில் பள்ளிகளுக்கு  விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் சர்மா தெரிவித்துள்ளார்.

இதேபோல, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பலவலாக கனமழை பெய்து வருகின்றது. இதனால், பல்வேறு மாவட்ட விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால், நிவர் மற்றும் புரெவி புயல்களால் பயிர்கள் சேதமடைந்து, பாதிப்புக்கு உள்ளான கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
Published by:Suresh V
First published: