ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

மாண்டஸ் புயல்.. சென்னை, திருவள்ளூர், வேலூர் மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை!

மாண்டஸ் புயல்.. சென்னை, திருவள்ளூர், வேலூர் மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை!

பள்ளி கல்லூரிகள் விடுமுறை

பள்ளி கல்லூரிகள் விடுமுறை

Cyclone Mandous school Leave | கனமழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Vellore, India

வங்கக்கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல் தென்மேற்கு வங்க கடலில் இருந்து மணிக்கு 10 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து இது வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழகம் புதுவை மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரையில், புதுச்சேரி-ஸ்ரீஹரிகோட்டா இடையே நாளை நள்ளிரவு கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 85 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், புயல் காரணமாக தமிழகம் மற்றும் புதுவைக்கு நாளை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கனமழை எச்சரிக்கை காரணமாக சில மாவட்டங்கள் விடுமுறை அளித்துள்ளன.

வேலூர்:

வேலூர் மாவட்டத்தில் இன்று (டிசம்பர் 08) பிற்பகல் மற்றும் நாளை (டிசம்பர் 9) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்று ஆட்சியர் அறிவித்துள்ளார்.

திருவள்ளூர்:

கனமழை காரணமாக திருவள்ளூர் மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு  நாளை (டிசம்பர் 9) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

சென்னை:

சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை (டிசம்பர் 9) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

First published:

Tags: College, Cyclone Mandous, Rainfall, School Leave, Vellore, Weather News in Tamil