ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

Cyclone Mandous | கனமழை எதிரொலி... பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

Cyclone Mandous | கனமழை எதிரொலி... பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

பள்ளி விடுமுறை

பள்ளி விடுமுறை

மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

வங்க கடலில் உருவாகி உள்ள மாண்டஸ் புயல் நாளை நள்ளிரவு கரையை கடக்க உள்ளது. இதனால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தலைமை செயலாளர் இறையன்பு தலைமையில் புயல் முன்னெச்சரிக்கை குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் புயலை எதிர்கொள்ள அனைத்து துறையினரும் தயார் நிலையில் இருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.

மேலும் சென்னை , திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு கல்வி நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை அறிவிக்க அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில் தலைமை செயலாளர் இறையன்பின் அறிவுறத்தலை தொடர்ந்து சென்னை, காஞ்சிபுரம், கடலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், திருவாரூர், பெரம்பலூர், தஞ்சாவூர், அரியலூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், திருவண்ணாமலை, தருமபுரி, நாகப்பட்டினம், திருச்சி, திருப்பத்தூர், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களின் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Cyclone Mandous, School Holiday