• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • School holiday : கனமழை - திருச்சி, நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

School holiday : கனமழை - திருச்சி, நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

மழை

மழை

கனமழை காரணமாக, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, தூத்துக்குடி, திருநெல்வேலி, மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
    தென் மேற்கு வங்ககடலின் மத்திய பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தில் பெய்து வரும் கனமழையால், தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, தூத்துக்குடி, திருநெல்வேலி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்துள்ளனர்.

    திருவாரூர் மாவட்டம் நன்னிலம், திருவாரூர், கூத்தாநல்லூர், வடுவூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, குடவாசல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக நேற்று இரவு மட்டும் திருவாரூரில் 8 சென்டி மீட்டர் மழையும், நன்னிலத்தில் 5 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது. இதேபோல, தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிகாலை முதல் மாவட்த்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.

    திருச்சி மாநகரில் ஏர்போர்ட், உறையூர், சத்திரம் பேருந்து நிலையம், கண்டன்மெண்ட், பாலக்கரை, கிராப்பட்டி மற்றும் பல்வேறு இடங்களிலும் புறநகர் பகுதிகளான திருவெரும்பூர், லால்குடி, மண்ணச்சநல்லூர், மணப்பாறை உள்ளிட்ட பல இடங்களிலும் அதிகாலை முதல் மிதமான மழை பெய்து வருகிறது.

    இந்நிலையில், தஞ்சை மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவித்துள்ளார். இதேபோல, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு தெரிவித்துள்ளார்.

    மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. குத்தாலம், மணல்மேடு, செம்பனார்கோவில் உள்ளிட்ட பகுதியில் கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக, மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா அறிவித்துள்ளார்.

    கரூர் மாவட்டம், கரூர், கிருஷ்ணராயபுரம், மாயனூர், குளித்தலை, லாலாபேட்டை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது. இதேபேல, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

    Must Read : தமிழகத்தின் 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் - வானிலை ஆய்வுமையம்

    அதன்படி, சென்னை, திருவள்ளுர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் இரவு முதலே மிதமான மழை பெய்து வருகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: