ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு அடுத்த 2 நாட்களுக்கு விடுமுறை!

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு அடுத்த 2 நாட்களுக்கு விடுமுறை!

மாதிரி படம்

மாதிரி படம்

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அடுத்த 2 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டியுள்ள வட தமிழக கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் நேற்று இரவு முதலே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக தொடர்ந்து வருகிறது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் விடாமல் மழை பெய்துவருகிறது. குறிப்பாக சென்னையில், இரவு முதல் தொடர்ந்து பெய்துவரும் மழையால் சாலையில் நீர் தேங்கியுள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழை நீர் உட்புகுந்ததால் பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளாகினர்.

இந்நிலையில், தமிழ்நாட்டில்‌ கடந்த 24 மணி நேரத்தில்‌, 36 மாவட்டங்களில்‌ அதிக அளவில்‌ மழை பெய்துள்ளது. சென்னை மாவட்டத்தில்‌ அதிகபட்சமாக 134.29 மி.மீட்டர் மழை பெய்துள்ளது. இதைத்தொடர்ந்து, சென்னையில் பாதிக்கப்பட்ட பகுதிகளில்‌ இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, மீட்பு மற்றும்‌ நிவாரண நடவடிக்கைகளை விரைவுபடுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்‌. மாநிலத்தில்‌ பரவலாக பெய்து வரும்‌ கனமழையின்‌ காரணமாக சாலைகள்‌ மற்றும்‌ குடியிருப்பு பகுதிகளில்‌ நீர்‌ தேங்காத வண்ணம்‌ வருவாய்த்‌ துறை, பொதுப்பணித்‌ துறை, உள்ளாட்சித்‌ துறை அமைப்புகள்‌ மூலம்‌ விரைவாக நடவடிக்கைகள்‌ மேற்கொள்ளப்பட வேண்டும்‌ என அறிவுறுத்தியுள்ளார்‌.

மேலும், தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வரும்‌ கனமழையின்‌ காரணமாகவும்‌, பெரும்பாலான மாவட்டங்களில்‌ கன மழை தொடரும்‌ என இந்திய வானிலை ஆய்வு மையம்‌ தெரிவித்துள்ள நிலையிலும்‌, 08.11.2021 மற்றும்‌ 09.11.2021 ஆகிய இரண்டு நாட்களுக்கு சென்னை, திருவள்ளூர்‌, காஞ்சிபுரம்‌ மற்றும்‌ செங்கல்பட்டு மாவட்டங்களில்‌ உள்ள அனைத்து பள்ளி மற்றும்‌ கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது சென்னை, திருவள்ளூர்‌ மற்றும்‌ காஞ்சிபுரம்‌ மாவட்டங்களில்‌ தொடர்ந்து மழை பெய்து வருவதாலும்‌, இந்த மாவட்டங்களில்‌ அமைந்துள்ள அணைகளிலிருந்து உபரி நீர்‌ திறந்து விடப்படுவதாலும்‌, தீபாவளி பண்டிகைக்காக சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு சென்றுள்ள பொது மக்கள்‌ இரண்டு அல்லது மூன்று நாட்கள்‌கழித்து சென்னைக்கு திரும்புமாறும்‌ முதலமைச்சர்‌ வேண்டுகோள்‌ விடுத்துள்ளார்‌.

First published:

Tags: Chennai, Heavy rain, Tn schools