வண்ணங்களால் ஹோலியைக் கொண்டாடித் தீர்த்த சென்னைவாசிகள்...!

 • Share this:
  வசந்தகாலத்தை வரவேற்பதற்காகவும், மக்கள் மத்தியில் புன்னகையையும், சகோதரத்துவத்தையும் நிலைநாட்டும் விதமாக ஆண்டுதோறும் மார்ச் மாதத்தில் வரும் பெளர்ணமி தினத்தை அடுத்து நாடுமுழுவதும் வண்ணங்களின் திருவிழாவான ஹோலி கொண்டாடப்படுகிறது.

  உலகையே கொரோனா வைரஸ் அச்சுறுத்திவரும் நிலையில் இந்தியாவில் இதுவரை கொரோனாவால் 56 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து நோய் பரவாமல் இருப்பதை உறுதிசெய்ய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது.  குறிப்பாக மக்கள் கூட்டம் கூட்டமாக ஒரே இடத்தில் கூடுவதை தவிர்க்கவேண்டும் என அறிவுறுத்தியுள்ள நிலையில் அந்த அச்சுறுத்தலுக்கு சற்றும் இடம்கொடுக்காமல், அதேவேலையில் உற்சாகத்திற்கும் குறைவில்லாமல் சென்னை சவுகார்பேட்டையில் வண்ணங்களின் விழாவை உற்சாகமாக மக்கள் கொண்டாடிமகிழ்ந்தனர்.  சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து வசந்தகாலத்தை வரவேற்க சவுகார்பேட்டை வீதிகளில் கூடிய இளைஞர் பட்டாளம் வண்ணங்களை ஒருவர் மீது ஒருவர் தூவி தங்கள் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். அவர்களின் கொண்டாட்டங்களை கொரோனா அச்சுறுத்தல் ஒன்றும் செய்யவில்லை. ஹோலி பண்டிகையால் சவுகார்பேட்டை வீதிமுழுவதும் வண்ணங்களால் நிறைந்திருந்தது.
  சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
  Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube
  Published by:Sankar
  First published: