Home /News /tamil-nadu /

4 வழிச்சாலை பாலத்தில் ஓட்டை: 100 நாட்களாகியும் சரிசெய்யாத தேசிய நெடுஞ்சாலை நிர்வாகம்..

4 வழிச்சாலை பாலத்தில் ஓட்டை: 100 நாட்களாகியும் சரிசெய்யாத தேசிய நெடுஞ்சாலை நிர்வாகம்..

4 வழிச்சாலை பாலத்தில் ஓட்டை: 100 நாட்களாகியும் சரி செய்யாத தேசிய நெடுஞ்சாலை நிர்வாகம்

4 வழிச்சாலை பாலத்தில் ஓட்டை: 100 நாட்களாகியும் சரி செய்யாத தேசிய நெடுஞ்சாலை நிர்வாகம்

நெல்லை தூத்துக்குடி இடையே பாலம் சேதமடைந்து 100 நாட்களை கடந்தும் சரி செய்யும் பணி தொடங்கப்படவி்ல்லை நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வரும் இந்த பாலம் சீரமைப்பை எப்போது தொடங்க போகிறார்கள் என்பதே தெரியாத நிலை உள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
நெல்லை தூத்துக்குடி இடையே பாலம் சேதமடைந்து 100 நாட்களை கடந்தும் சரி செய்யும் பணி தொடங்கப்படவி்ல்லை நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வரும் இந்த பாலம் சீரமைப்பை எப்போது தொடங்க போகிறார்கள் என்பதே தெரியாத நிலை உள்ளது.

நெல்லை-தூத்துக்கடி இடையே உள்ள 47 கிலோமீட்டர் தூரத்திற்கும் வாகன போக்குவரத்து அதிகம் இருப்பதை கணக்கில் கொண்டு 4 வழிச்சாலை அமைக்க கடந்த 2004-ஆம் ஆண்டு முடிவ செய்யப்பட்டது.

232 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தை 2007 ஆம் ஆண்டு ஒப்பந்தகாரர்  பாதியில் நிறத்திவிட்டு சென்று விட்டார். இந்த நிலையில் கூடுதல் திட்ட மிதிப்பீடு தயாரிக்கபட்டு 2010 ஆம் ஆண்டு மீண்டும் பணிகள் தொடங்கியது.



பாதியில் நிறுத்தபட்ட தாமிரபரணியின் குறுக்கே 2 பாலங்கள் மற்றும் சிறிய பாலங்கள், சாலைகள் 320 கோடி மதிப்பீட்டில் அமைக்க திட்டமிடப்பட்டு தொடங்கப்பட்ட பணிகள் 2013 ஆம் ஆண்டு நிறைவடைந்தது.

இதனையடுத்து 4 வழிச்சாலை பொது போக்குவரத்திற்கு திறந்து விடப்பட்டது. 6 ஆண்டுகளில் நெல்லை- தூத்துக்குடி செல்லும் பாதையில் உள்ள ஆற்றுப்பாலம் சேதமடைந்தது 6 மாதம் போக்குவரத்து நிறுத்தப்பட்டு பாலம்  பழுது பார்க்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு மீண்டும் போக்குவரத்து தொடங்கபட்டது .



இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் தூத்துக்குடியிலிருந்து நெல்லை வரும் வழியில் உள்ள பாலம் கான்கீரீட் பெயர்ந்து ஓட்டை விழுந்தது சுமார் 4 அடி விட்டத்திற்கு விழுந்த ஓட்டை காரணமாக பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.

இதனையடுத்து அந்த பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு தேசிய நெடுஞ்சாலை ஆணயைத்தின் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஒரே பாலத்தில் இரண்டு வழி போக்குவரத்தும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் பாலம் சேதமடைந்து 100 நாட்களை கடந்தும் சரி செய்யும் பணி தொடங்கப்படவி்ல்லை நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வரும் இந்த பாலம் சீரமைப்பை எப்போது தொடங்க போகிறதர்கள் என்பதே தெரியாத நிலை உள்ளது.

ஒரே பாலத்தில் செல்வதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. செப்பனிடும் பணிகளை தொடங்கியதிலிருந்து பணிகள் முடிவடைய 6 மாதம் ஆகும் நிலையில் எப்போது தொடங்குவார்கள் என்பதே தெரியாத நிலை உள்ளது.

மேலும் படிக்க...

அதிகரித்து வரும் கொரோனா தொற்று எண்ணிக்கை: கடும் கட்டுப்பாட்டுக்குள் வந்தது புதுச்சேரி சட்டமன்றம்..

இதனால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இவை அனைத்திற்கும் மேலாக பயனுக்கு வந்து சிறிது காலங்களிலே பயன்படுத்த முடியாத அளவில் சேதங்கள் அடைந்துள்ள நிலையில்  புதிய பாலங்களின் அருகே 100 ஆண்டை கடந்த பழைய பாலம் கம்பீரமாக காட்சியளிக்கிறது.
Published by:Vaijayanthi S
First published:

Tags: River bridge construction

அடுத்த செய்தி