Home /News /tamil-nadu /

ஹாக்கி பயிற்சி பெறும் மாணவிகளிடம் பாலியல் தொல்லை செய்ததாக திமுக நிர்வாகி கைது

ஹாக்கி பயிற்சி பெறும் மாணவிகளிடம் பாலியல் தொல்லை செய்ததாக திமுக நிர்வாகி கைது

ஹாக்கி பயிற்சி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு

ஹாக்கி பயிற்சி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு

சிவகங்கையில் ஹாக்கி பயிற்சி பெறும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தி.மு.க நிர்வாகியும் ஹாக்கி பயிற்சியாளருமான சங்கரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செட்டிநாடு பெண்கள் ஹாக்கி கிளப் ஒன்று செயல்பட்டுவருகிறது. இதில் ஹாக்கியில் ஆர்வமுள்ள பள்ளி மாணவிகளுக்கு இலவசமாக பயிற்சி வழங்கப்படுகிறது. பயிற்சியாளராக சங்கர் செயல்பட்டு வருகிறார்.

    காரைக்குடி அருகே பள்ளத்தூரை சேர்ந்தவரான இந்த சங்கர்,  சாக்கோட்டை மேற்கு ஒன்றிய தி.மு.க, மாணவரணி அமைப்பாளராக உள்ளார்.

    இந்நிலையில் மதுரை அருகே வாடிப்பட்டி பகுதியை சேர்ந்த சகோதரிகளான சிறுமிகள் இவரிடம் ஹாக்கி பயிற்சி பெற்று வந்துள்ளனர். அந்த சிறுமிகள் இருவரையும் சங்கர் அவரது அறைக்கு வரச்சொல்லி அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததுடன் சாப்பிட்டு மீதம் வைத்த சாப்பாட்டை சாப்பிட சொல்வது போன்ற தொந்தரவுகளும் கொடுத்ததாக கூறப்படுகிறது.



    இதை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட சிறுமிகள் பள்ளி முதல்வரிடம் புகார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக சிறுமிகளின் பெற்றோருக்கு பள்ளி முதல்வர் தகவல் தெரிவித்துள்ளார்.

    ALSO READ |  சிறு வயதில் ஏற்பட்ட பாலியல் தொல்லை... வளர்ந்த பின்பும் துரத்துகிறதா? பயத்தில் இருந்து மீள்வது எப்படி?

    சிறுமிகளின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் காரைக்குடி அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் தேவகி, ஹாக்கி பயிற்சியாளர் சங்கர் மற்றும் அவரது உதவியாளர் கண்ணன் ஆகிய இருவரையும் போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.



    இந்நிலையில், பயிற்சியாளர் மீது உள்ள காழ்புணர்ச்சி காரணமாக மாணவிகள் மூலம் பாலியல் புகார் கொடுத்துள்ளதாக அவரிடம் பயிற்சி பெற்று வரும் மாணவிகள் சிலர் மாவட்ட துணைக் கண்காணிப்பாளர் அருணிடம் புகார் மனு அளித்தனர்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Crime | குற்றச் செய்திகள், Hockey, Sivagangai

    அடுத்த செய்தி