முகப்பு /செய்தி /தமிழ்நாடு / சென்னை வந்த பிரதமர் மோடியை கொல்ல திட்டம் - போனில் மிரட்டல் விடுத்த பாஜக நிர்வாகி கைது

சென்னை வந்த பிரதமர் மோடியை கொல்ல திட்டம் - போனில் மிரட்டல் விடுத்த பாஜக நிர்வாகி கைது

நரேந்திர மோடி

நரேந்திர மோடி

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

சென்னை ஐஐடி பட்டமளிப்பு நிகழ்ச்சிக்கு நேற்று பிரதமர் மோடி வந்த நிலையில், ராஜீவ் காந்தியை போல அவர் கொல்லப்படுவார் என்று போனில் மிரட்டல் விடுத்த பாஜக கூட்டுறவு பிரிவு செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை ஐஐடியில் நேற்று நடந்த பட்டமளிப்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இந்த நிலையில், சென்னை வேப்பேரியில் இயங்கும் காவல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசிக்கு ஞாயிற்றுக்கிழமை ஒரு அழைப்பு வந்தது.

அதில் பேசிய நபா், ஐ.ஐ.டி.யில் திங்கள்கிழமை (நேற்று) நடைபெறும் விழாவில் பங்கேற்க வரும் பிரதமா் நரேந்திர மோடியை வெடிகுண்டு வைத்து கொலை செய்ய சிலா் திட்டமிட்டிருப்பதாகவும், அவா்கள் முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியை கொலை செய்ததுபோல மோடியையும் கொலை செய்ய திருவான்மியூா் ஆா்.டி.ஓ. அலுவலகம் அருகே பதுங்கியிருப்பதாகவும் கூறிவிட்டு போன் இணைப்பை அந்த நபர் துண்டித்தார்.

இந்த தகவல் உடனடியாக உயா் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. சைபா் குற்றப்பிரிவு போலீசாருக்கும், திருவான்மியூா் போலீஸாருக்கும் மிரட்டல் அழைப்பு குறித்து விசாரணை செய்ய உத்தரவிடப்பட்டது.

இதையடுத்து, விசாரணை தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், போனில் மிரட்டல் விடுத்த நபர் திருவான்மியூா் திருவள்ளூவா் நகா் பகுதியைச் சோ்ந்த பாஜக.வின் காஞ்சிபுரம் மாவட்டம் கூட்டுறவு பிரிவு செயலா் திருநாவுக்கரசு என்பது தெரியவந்தது.

அவரைப் பிடித்து விசாரிக்கையில், பிரதமர் மோடிக்கு போலீஸாா் கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதற்காக போதையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக கூறியுள்ளார். இதனை அடுத்து போலீசார் திருநாவுக்கரசை கைது செய்தனர்.

First published:

Tags: Chennai, PM Modi