எச்ஐவியால் பாதிக்கப்பட்ட பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு!

முன்பின் தெரியாத வயது குறைவான ஒருவருரிடம் தகாத உறவால் ஏற்பட்ட விபரீதம். அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது எனபது குறிப்பிடத்தக்கது.

Web Desk | news18
Updated: August 3, 2019, 11:46 AM IST
எச்ஐவியால் பாதிக்கப்பட்ட பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு!
எச்ஐவி-யால் உயிரிழந்த பெண்ணின் உடலை வாங்க நிற்கும் உறவினர்கள்
Web Desk | news18
Updated: August 3, 2019, 11:46 AM IST
நாகையில் எச்ஐவியால் பாதிக்கப்பட்ட பெண் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். எச்ஐவியை பரப்பியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாகை செல்லூர் பகுதியை சேர்ந்த தங்கதுரையின் மனைவி பழனியம்மாள் . இவர் தனது கணவரை பிரிந்து அதே பகுதியை சேர்ந்த மாரியப்பன் என்பருடன் வாழ்ந்து வந்துள்ளார். பழனியம்மாளை விட 15 வயது குறைவான மாரியப்பன் ஏற்கனவே எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது.

பழனியம்மாள் இறந்து கிடப்பதை அறிந்த அவரது உறவினர்கள் அங்கு சென்று பார்த்தபோது தீயில் கருகியும், தலையில் அடிபட்டு ரத்த காயத்துடன் இறந்துள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதன்பின்னர் வெளிப்பாளையம் காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளனர்.


அந்த புகாரில் இருவருக்கும ஏற்பட்ட தகராறில் பழனியம்மாளை கொலை செய்திருக்கலாம் எனவும், மாரியப்பனை கைது செய்ய வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர். பழனியம்மாளின் உடலை கைப்பற்றி சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இறந்த பெண்ணின் உடல் வைக்கப்பட்டுள்ள பிணவறை


முன்பின் தெரியாத வயது குறைவான ஒருவருரிடம் தகாத உறவால் ஏற்பட்ட விபரீதம். அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Loading...

மேலும் படிக்க...  மதுரையில் பெண்கள் காப்பகம் என்ற பெயரில் பாலியல் தொழில்

அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: August 3, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...