எச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்ட சாத்தூர் பெண்ணுக்கு ரூ.25 லட்சம் வழங்க அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

news18
Updated: July 26, 2019, 4:20 PM IST
எச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்ட சாத்தூர் பெண்ணுக்கு ரூ.25 லட்சம் வழங்க அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!
உயர்நீதிமன்ற மதுரை கிளை
news18
Updated: July 26, 2019, 4:20 PM IST
சாத்தூரில் கர்பிணியாக இருந்த போது, தவறுதலாக எச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்ட பெண்ணுக்கு, ரூ.25 லட்சம் இழப்பீடாக வழங்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 30-ம் தேதி, சிவகாசி அரசு இரத்த வங்கியில் 21 வயது இளைஞர் ரத்ததானம் செய்துள்ளார். அடுத்த சில நாட்களில், அந்த இளைஞரிடம் இருந்து பெறப்பட்ட ரத்தம் முறையான சோதனைக்குப் பிறகு பாதுகாப்பு அறைக்கு அனுப்பப்பட்டது.

டிசம்பர் 3-ம் தேதி சாத்தூரைச் சேர்ந்த ரத்த சோகையால் பாதிக்கப்பட்ட, 8 மாத கர்ப்பிணிக்கு இளைஞரிடம் இருந்து பெறப்பட்ட ரத்தம் செலுத்தப்பட்டது. ரத்தம் செலுத்தப்பட்ட பிறகு, கர்ப்பிணிக்கு காய்ச்சல், தலைவலி, வயிற்றுப்போக்கு ஆகியவை ஏற்பட்டுள்ளது. இதனால் டிசம்பர் 17-ம் தேதி, சாத்தூர் சுகாதார மையத்தில் இரத்தப் பரிசோதனை நடத்தப்பட்டதில் எச்.ஐ.வி தொற்று இருப்பது உறுதியானது.


இந்த விவகாரம் ஊடகங்களில் வெளியானதும் மாநிலம் முழுவதும் அதிர்ச்சி ஏற்பட்டது. சேமிப்பில் உள்ள அனைத்து ரத்தங்களையும் பரிசோதனை செய்ய அரசு உத்தரவிட்டது.

இதற்கிடையே, ரத்த தானம் செய்த இளைஞர் விஷம் குடித்து சில நாட்கள் சிகிச்சைக்குப் பின்னர் உயிரிழந்தார்.

கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி சிகிச்சைக்கான மருந்துகள் வழங்கப்பட்டது. இதனை அடுத்து, அந்தப் பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது.

Loading...

குழந்தைக்கு எச்.ஐ.வி தொற்று பரவாமல் தடுக்க, பல சிகிச்சைக்கள் மேற்கொள்ளப்பட்டு, பின்னர், குழந்தைக்கு எச்.ஐ.வி தொற்று இல்லை என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இது தொடர்பான வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் என்று அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
First published: July 26, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...