இந்து சமய அறநிலைத்துறையை சைவ சமய அறநிலைத்துறை என்றும் வைணவ சமய அறநிலைத்துறை என்றும் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனின் 60-வது பிறந்தநாளை முன்னிட்டு குறும்பட, ஆவணப்பட கலை விழா சென்னையில் கடந்த வாரம் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் வெற்றிமாறன், நம்முடைய அடையாளங்களைத் நம்மிடமிருந்து தொடர்ந்து எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். திருவள்ளுவருக்கு காவி உடை கொடுக்கிறார்கள். ராஜராஜ சோழன் ஓர் இந்து அரசன் என்கிறார்கள். சினிமாவிலும் இது நடந்துவிடும். எனவே, நம் அடையாளங்கள் நாம் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்று வெற்றிமாறன் பேசினார்.
வெற்றிமாறன் பேசிய கருத்து சர்ச்சையாக மாறியது. ராஜராஜ சோழன் இந்து மன்னன்தான் என்று ஒரு தரப்பினரும், அவர் சைவ மதத்தைச் சேர்ந்தவர் என்று மற்றொரு தரப்பினரும் விவாதிக்க ஆரம்பித்தார்கள். மேலும் பாஜக கட்சியில் ஹெச்.ராஜா, வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் வெற்றிமாறன் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். அதேநேரம் நடிகர் கமல்ஹாசன், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், நடிகர் கருணாஸ் உள்ளிட்டோர் வெற்றிமாறனுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
ராஜராஜ சோழன் காலத்தில் இந்து மதம் ஒன்று இல்லை என்றும் சைவ மற்றும் வைணவம் மதம் என்று தான் இருந்தது எனவும் ஆங்கிலேயர்கள் காலத்தில் தான் இந்து மதம் என பெயர் வந்தது என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால் ராஜராஜ சோழன் மதம் குறித்த சர்ச்சை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் இந்து சமய அறநிலைத்துறையை சைவ சமய அறநிலைத்துறை என்றும் வைணவ சமய அறநிலைத்துறை என்றும் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Hindu, Thirumavalavan