Home /News /tamil-nadu /

பெண்களுக்கு இலவச பயணம் சரி.. ஆண்களுக்கு எங்கே? - சம உரிமை கேட்டு இந்து தேசிய கட்சியினர் நூதன ஆர்ப்பாட்டம்

பெண்களுக்கு இலவச பயணம் சரி.. ஆண்களுக்கு எங்கே? - சம உரிமை கேட்டு இந்து தேசிய கட்சியினர் நூதன ஆர்ப்பாட்டம்

இந்து தேசிய கட்சியினர் நூதன ஆர்ப்பாட்டம்

இந்து தேசிய கட்சியினர் நூதன ஆர்ப்பாட்டம்

Tirunelveli District : பெண்களுக்கு தமிழகம் முழுவதும் பயணம் செய்வதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆண்கள், பெண்கள் என்கிற பாகுபாடின்றி உண்மையான சமத்துவத்தை தமிழக அரசு நிலைநாட்ட வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.

மேலும் படிக்கவும் ...
    வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள ஆண்களுக்கும் பேருந்தில் இலவச பயணம் செய்ய அனுமதி வழங்க வலியுறுத்தி பேருந்து ஓட்டுவது போன்று நடித்து இந்து தேசிய கட்சியினர் நூதனமான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்ய தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. அதன் அடிப்படையில் பெண்கள் இலவசமாக பேருந்துகளில் பயணம் செய்து வருகின்றனர்.

    அந்த வகையில் தமிழ்நாட்டில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள அனைத்து ஏழை ஆண்களுக்கும் பேருந்தில் இலவச பயணம் மேற்கொள்வதற்கான அங்கீகாரத்துடன் புதிய இலவச பேருந்து பயணத்தை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு இந்து தேசிய கட்சியினர்  ஒலி எழுப்பி, விசில் சத்தத்துடன் பேருந்து ஓட்டுவது போன்று நடித்து நூதனமான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



    மேலும் பெண்களுக்கு தமிழகம் முழுவதும் பயணம் செய்வதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆண்கள், பெண்கள் என்கிற பாகுபாடின்றி உண்மையான சமத்துவத்தை தமிழக அரசு நிலைநாட்ட வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.



    இது குறித்து இந்து தேசிய கட்சி நிறுவனர் தலைவர் மணி பேசும் போது, திமுக அரசு தேர்தல் வாக்குறுதியில் அளித்தது போலவே பெண்களுக்கு இலவச பயணத்தை உறுதி செய்துள்ளனர். பெண்கள் , ஆண்கள் என்ற பாகுபாடு இன்றி ஆண்களும் தங்கள் வாக்குகளை செலுத்தி உள்ளனர். அதனை கருத்தில் கொண்டு வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள ஆண்களுக்கும் பேருந்து பயணம் இலவசம் என உறுதி செய்ய வேண்டும். அதே சமயத்தில் பேருந்தில் தமிழகம் முழுவதும் பெண்கள் இலவசமாக பயணம் செய்ய அரசு உறுதி செய்ய வேண்டும். ஆண்கள் , பெண்கள் என எந்த பாகுபாடும் பார்க்காமல் சமத்துவத்தை நிலைநாட்ட வேண்டும். அதற்கான கோரிக்கை மனு சமர்பிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

    ஐயப்பன், செய்தியாளர், திருநெல்வேலி 
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Tirunelveli

    அடுத்த செய்தி