தி.க. பிரசாரக் கூட்டத்தில் கல், செருப்புகளை வீசி இந்து முன்னணியினர் ரகளை!
தி.க. பிரசாரக் கூட்டத்தில் கல், செருப்புகளை வீசி இந்து முன்னணியினர் ரகளை!
கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி
இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், திராவிடர் கழகத்தைச் சேர்ந்த எட்டு பேரையும், இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்தவர்களையும் கைது செய்தனர்.
திருச்சியில் திராவிடர் கழக பிரசாரக் கூட்டத்தில் கல், செருப்புகளை வீசி இந்து முன்னணியினர் ரகளையில் ஈடுபட்டதால் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.
திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் திருச்சி காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசருக்கு ஆதரவாக, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பரப்புரை மேற்கொண்டார்.
தாராநல்லூரில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தின்போது, இந்து முன்னணியைச் சேர்ந்த சிலர் இடைமறித்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் கல், செருப்புகளை வீசிரகளையில் ஈடுபட்டனர்.
இதனால் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், திராவிடர் கழகத்தைச் சேர்ந்த எட்டு பேரையும், இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்தவர்களையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இந்து முன்னணியினரை விடுவிக்கக் கோரி, நள்ளிரவில் காந்தி மார்கெட் காவல் நிலையம் வந்த பாஜக-வினர் கோரிக்கை வைத்தனர்.
முன்னதாக கூட்டத்தில் பேசிய கி.வீரமணி, தோல்வி பயத்தில் சிலர் ரகளை செய்வதாக விமர்சித்தார்.
Also see...
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
ஐ.பி.எல் தகவல்கள்
POINTS TABLE:
ORANGE CAP:
PURPLE CAP:
RESULTS TABLE:
SCHEDULE TIME TABLE:
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.