முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தொடரும் பாஜக - இந்து முன்னணி மோதல் : பெண்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டிய இளைஞர்..!

தொடரும் பாஜக - இந்து முன்னணி மோதல் : பெண்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டிய இளைஞர்..!

விட்டினுள் நுழையும் இளைஞர்

விட்டினுள் நுழையும் இளைஞர்

  • 1-MIN READ
  • Last Updated :

கோவையில் பாஜக பிரமுகரின் வீட்டிற்குள் நுழைந்து பெண்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டிய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

கோவை கவுண்டம்பாளையம் ராமசாமி நகர் பகுதியில் கடந்த 1-ஆம் தேதி இந்து முன்னணி மற்றும் பாஜகவினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில், இந்து முன்னணியைச் சேர்ந்த நிர்வாகிகள் கார்த்திக், ஜெரால்ட், அவரது நண்பர் ஹரிஷ் ஆகியோருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதையடுத்து மூவரும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

மோதல் தொடர்பாக பாஜக இளைஞர் அணி நிர்வாகி அசோக் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்த துடியலூர் போலீசார், 4 பேரை கைது செய்தனர். தலைமறைவான அசோக் உட்பட இருவரை தேடி வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று மாலை கவுண்டம்பாளையம் முருகன் நகரில் உள்ள பாஜக நிர்வாகி அசோக் வீட்டின் அருகே சென்ற இளைஞர் ஒருவர், திடீரென அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை உடைத்து விட்டு வீட்டினுள் புகுந்தார்.

இதையடுத்து வீட்டிலிருந்த நாற்காலிகளை உடைத்த இளைஞர், அசோக்கின் மனைவி மற்றும் தாயாரை கத்தியைக் காட்டி மிரட்டி தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. தகவலறிந்து நிகழ்விடத்திற்கு சென்ற போலீசார், அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அந்த இளைஞர், மோதலில் படுகாயமடைந்த இந்து முன்னணி நிர்வாகிகளின் நண்பர் எனக் கூறப்பட்ட நிலையில், விசாரணையை முடுக்கிய போலீசார் பெண்ணிடம் கத்தியைக் காட்டி மிரட்டியதாக தினேஷ் எனும் இளைஞரை கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Also see:

First published:

Tags: BJP, Coimbatore, Hindu Munnani