ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

விநாயகர் சதுர்த்திக்கு நன்கொடை தர மறுத்த தனியார் நிறுவனம் மீது இந்து முன்னணி அமைப்பினர் தாக்குதல்!

விநாயகர் சதுர்த்திக்கு நன்கொடை தர மறுத்த தனியார் நிறுவனம் மீது இந்து முன்னணி அமைப்பினர் தாக்குதல்!

வீடியோ காட்சிகள்

வீடியோ காட்சிகள்

  • News18
  • 1 minute read
  • Last Updated :

திருப்பூர் அருகே நன்கொடை தர மறுத்த தனியார் நிறுவனம் மீது இந்து முன்னணி அமைப்பினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

திருப்பூர் அங்கேரிபாளையம் பகுதியில் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி விநாயகர் சிலை வைப்பதற்காக இந்து முன்னணி அமைப்பினர், நன்கொடை வசூலித்துள்ளனர். அப்பகுதியில் உள்ள தனியார் பின்னலாடை நிறுவனம் நன்கொடை தர மறுத்ததாக கூறப்படுகிறது.

இதனால், ஆத்திரமடைந்த இந்து முன்னணியைச் சேர்ந்த பலர் கற்களை வீசி, நிறுவனத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதல் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

திருப்பூர் வடக்கு பகுதி போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டும், அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

First published:

Tags: Hindu Munnani