தமிழகத்தில் தி.மு.க அரசு பதவியேற்றதில் இருந்து பா.ஜ.கவுடன் கருத்தியல் ரீதியிலான மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறது. அதிலும் மத்திய அரசை தமிழக அரசு ஒன்றிய அரசு என அழைப்பது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சட்டப்பேரவையிலே இதுதொடர்பாக விவாதம் எழுந்தது. பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் இந்தியாவிலிருந்து பிரிந்ததுதான் மாநிலங்கள்”என்றார். “இந்தியாவிலிருந்து மாநிலங்கள் பிரியவில்லை; எல்லா மாநிலங்களும் ஒன்றிணைந்து உருவாக்கியதுதான் இந்தியா” என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி விளக்கம் அளித்தார்.
Also Read: மாணவர்களுக்காக வீதியில் இறங்கி தண்டோரோ போடும் தலைமை ஆசிரியர்
ஒன்றியம் என்ற சொல் தவறான சொல் அல்ல. மாநிலங்கள் எல்லாம் சேர்ந்தது என்பதுதான் அதன் பொருள். அந்த ஒரு வார்த்தையில் கூட்டாட்சித் தத்துவம் அடங்கியிருக்கிறது. அதற்காகத்தான் அதை நாங்கள் பயன்படுத்துகிறோம். பயன்படுத்துவோம் - பயன்படுத்திக்கொண்டே இருப்போம்” என்றார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் அர்ஜூன் சம்பத், தமிழக முதலமைச்சர் ஸ்டாலினை ஆலோசனைக்குழு தலைவர் எனக் அழைக்கலாமா எனக் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ சமீப காலமாக, மத்தியிலுள்ள பா.ஜ., அரசை, 'மத்திய அரசு' என்று குறிப்பிடுவதை தவிர்த்து, 'ஒன்றிய அரசு' என்று, தமிழக முதல்வர், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.
அதே போல், ஸ்டாலினை முதல்வர் என்று தான் அழைக்க வேண்டும் என்பது சட்டம் அல்ல; அவரை ஆலோசனைக் குழு தலைவர் என்றும் அழைக்கலாம். அவர் கவர்னருக்கு ஆலோசனை சொல்லும் குழுவின் தலைவர் தான். இறுதி முடிவு கவர்னரிடம் தான் உள்ளது. இதை நான் சொல்லவில்லை; இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு - 163 சொல்கிறது.அதனால், இனிமேல் சட்டப்படி, 'ஆலோசனைக்குழு தலைவர் ஸ்டாலின் அவர்களே' என அழைக்கலாம். 'ஒன்றிய அரசு' சரி என்று ஏற்றுக்கொள்பவர்கள், இதையும் ஏற்க வேண்டும்” என்றார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Arjun Sampath, BJP, DMK, MKStalin